Saturday, September 19, 2009

ராகுல் பேச்சுக்கு ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?

எப்பவும் தலைவர் வழி தனிவழிதான்..!- ரசிகர்கள்

ரஜினியை காங்கிரசில் சேர ராகுல் காந்தி அழைத்த விதம், பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து நாம் ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளோம்.

அவரது அழைப்புக்கு ரஜினி தன் பாணியில் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இப்போது, நமது ரசிக நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போமா

p6

வலசை எம்.ரஜினி ஆனந்த் (திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர், ரஜினி தலைமை ரசிகர்மன்றம்):

”விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி, ஆளுங்கட்சித் தலைவர்கள் எல்லாம் ‘தண்ணீர் பிரச்னைக்கு நிர்ந்தரத் தீர்வு, தேசிய நதிகளை இணைப்பதுதான்’னு புரிஞ்சுக்கிட்டாங்க. அதன்படிதான் எங்க தலைவர் ரஜினியும் தன் கருத்தைத் தெரிவிச்சாரு.

இப்போ, ராகுல்காந்தி திடீர்னு ‘நதிகளை இணைச்சா, இயற்கை சூழலுக்கு ஆபத்து ஏற்படும்’னு சொல்றது, அவர் தனிப்பட்ட கருத்து. அது பத்தி நாங்க ஏன் கவலைப்படணும்?”

ரஜினி டில்லி (சென்னை அண்ணாநகர் ரஜினி மன்ற செயலாளர்):

”ராகுல் வளர்ந்து வர்ற தலைவர். சில விஷயங் கள் அவருக்கு இன்னும் புலப்படலை.

ஏதோ ஆவேசத்துல அரைவேக்காட்டுத்தனமா சில வார்த்தைகளை விட்டுட்டாரு. பி.ஜே.பி. போன்ற கட்சி களின் முக்கியஸ்தர்கள் ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிச் சிருக்காங்க. ஏன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவே ராகுல் கருத்தை அவரோட தனிப்பட்ட கருத்துன்னு சொல்லிட் டாரே…”

‘தளபதி’ ராமு (ரஜினி ரசிகர் மன்ற மண்டலத் தலைவர், சூரமங்கலம், சேலம்):

”இமயம் முதல் கன்னியாகுமரி வரை பார்த்தவரு எங்க தலைவரு. நதிகளை இணைக்க முடியுமா, முடியாதான்னு அவருக்குத் தெரியாதா..?

‘முடியாது’ன்னு அவசரப்பட்டு சொன்னதுக்கு ராகுலும் காங்கிரஸும் வெட்கப்படணும்.

அது மட்டுமில்லாம, ‘ரஜினிகாந்த் ஒரு குற்றவாளி கிடையாது. அதனால அவரை காங்கிரஸ்ல சேர்த்துக்கறதுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது’ங்கிற ரீதியில் ஓவரா பேசியிருக்காரு!

ரஜினி குற்ற வாளியா இல்லையானு இவர்கிட்ட யார் சர்டிஃபிகேட் கேட்டது..? நீங்க கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும், எங்க தலைவர் உங்க கட்சிக்கு வர மாட்டாரு. ஏன்னா, எப்பவும் எங்க தலைவர் வழி, தனி வழிதான்..!

p7a

திருமாறன் (ரஜினிகாந்த் ரத்ததானக் கழக நிறுவனர், திருநெல்வேலி):

”எங்க தலைவரின் பேச்சுக்குப் பிறகுதான் நதிநீர் இணைப்பு விஷயம் பொது விவாதமாக எழுந்தது. இது பத்தியெல்லாம் தெரிஞ்சுக்காம… ராகுல் சொல்லியிருக் குறது கண்டனத்துக்குரியது. நேரு, இந்திரா, ராஜீவ்னு பெரிய அரசியல் பாரம்பரியத்துல வந்த அவர் இப்படிப் பேசினது சரியில்லை! உடனடியாக அவரோட இந்தக் கருத்தை வாபஸ் வாங்கணும்!”

‘ரஜினி’அருள் (ரஜினி ரசிகர், மணக்காடு- ஆத்தூர்):

”ராகுல் வரவு காங்கிரஸ்ல புது உற்சாகம் தந்திருக்கு… ஆனா, நதிநீரை இணைக்க முடியாதுன்னு பேசியிருப்பது, தென்மாநில மக்கள் மத்தியில் காங்கிரஸுக்குப் பெரிய பின்னடைவை உண்டாக்கும். இது ராகுல் காந்தி தானாகப் பேசினது மாதிரி தெரியல. காங்கிரஸ்ல இருக்கிற வேற யாரோ சிலர்தான் தூண்டிவிட்டுப் பேச வெச்சிருக்ணும். எப்படியோ, வாயைக் கொடுத்து வம்புல மாட்டிக்கிட்டாரு. தலைவரை எதிர்த்த யாரும் அரசியல்ல நிலைச்சு நின்னதா சரித்திரமே இல்லை..!”

ஜாஃபர் (தலைவர், மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம்):

”ராகுலோட பேச்சைக் கேட்டுக் கொதிச்சுப் போய், எங்க மன்றத் தலைமையிடம் பேசினேன். நதிநீர் இணைப்புக் கொள்கையில் தலைவர் இப்பவும் உறுதியாகத்தான் இருக்கிறாராம். இருந்தாலும், இந்தியத் திருநாட்டையே ஆளக்கூடிய இடத்தில் இருக்கும் ராகுல், விஷயம் தெரியாமல் இப்படியரு கருத்தைச் சொல்லியிருப்பாரான்னு தலைவர் ரஜினி ரொம்பவே யோசிச்சிட்டு இருக்காராம். ‘நதிநீர் இ¬ணைப்பின் சாதக-பாதகங்கள் பத்தி வல்லுநர்களிடம் கேட்போம். அவர்களது கருத்துகள் நம்முடை யதோடு ஒத்துப்போனால் ராகுலுக்கு பதில் கொடுப்போம். அதுவரை பொறுமையாக இருங்க’னு மன்றத்துல சொல்லியிருக்காங்க! அதனாலதான் பொறுமையா இருக்கோம். இல்லாட்டி…!”

பிரேம்நாத் (மாவட்ட செயலாளர், ரஜினிகாந்த் நண்பர்கள் நற்பணி மன்றம்-கோவை):

“மாநிலங்களுக்கு இடையே நதிநீரை பங்கீடு செய்வதிலேயே பிரச்னைகள் முடிந்தபாடில்லை. பிறகெப்படி தேசிய அளவில் நதி இணைப்பு சாத்திய மாகும்? நதிகளை இணைத்தால், மொத்த நாடும் வளம் பெறும் என்பது உண்மைதான். ஆனால், விவசாய நிலங்களை எல்லாம் கான்க்ரீட் காடுகளாக்கிட்டோம். விவசாயம் செய்ய எங்கே நிலம் இருக்கிறது? ‘நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தரத் தயார்’ எனச் சொன்னது, தலைவரின் பெருந்தன்மை. மத்தபடி, ராகுல் தன் கருத்தாகச் சொன்னதுலயும் தப்பு இருக்குற மாதிரி எனக்குத் தெரியலை…”

http://www.envazhi.com/wp-content/uploads/2009/09/p7.jpg

பாலநமச்சி (ரஜினி மன்ற செயலாளர், ராமநாதபுரம்):

”நாட்ல தண்ணீருக்காக எவ்வளவு பிரச்னைகள்… எல்லோரும் தொடர்ந்து ஒத்துமையா இருக்க, நதிகளை இணைக்கறதுதான் ஒரே வழி. அதுக்காகத்தான் ரஜினி முயற்சி எடுத்தாரு. கேட்ட குரலுக்கு பாட்டில் தண்ணீர் கொண்டுவந்து குடித்தே பழகிய ராகுலுக்கு, குடிதண்ணிக்காக மக்கள் படுற கஷ்டம் தெரி யுமா? ராகுலை மறந்துட்டு, நதிகளை இணைக்கிற வழியைத்தான் எல்லோரும் யோசிக்கணும். அதான் இப்ப முக்கியம்…”

ரஜினி வீரமணி (நகர செயலாளர், ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், மயிலாடுதுறை):

”எங்க தலைவர், ஏழைகள் வாழணும்னுதான் நதிகளை இணைக்கணும்னு சொன்னாரு. அதுக்காக ஒரு கோடி என்ன… அஞ்சு கோடிகூட கொடுப்பாரு! தமிழகம் முழுக்க உள்ள எல்லா ரசிகர்களும் முடிஞ்சதைக் கொடுப்போம்.

பி.ஜே.பி. ஆட்சி தொடர்ந்திருந்தா, நிச்சயம் நதி நீரை இணைச்சிருப்பாங்க. பி.ஜே.பி. ஆட்சியில் பேசப்பட்ட திட்டம் என்ற அரசியல் பார்வையோடுதான் ராகுல் அதற்கு மாறாகப் பேசியிருப்பாருனு நினைக்கிறேன்!’

நன்றி-விகடன்
மற்றும்
என்வழி.காம்

No comments:

Post a Comment