Saturday, August 29, 2009

தலைமை மன்றத்திலிருந்து ஒரு எச்சரிக்கை!

தலைமை மன்றத்திலிருந்து ஒரு எச்சரிக்கை!

http://www.envazhi.com/wp-content/uploads/2009/08/baasha.jpg

ரஜினி ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாகவும் கறாராகவும் இருந்து வருகிறார்அது தன் பெயரைச் சொல்லி சில சுயநலக்காரர்கள் செய்யும் வசூல்.

நற்பணி செய்கிறேன், அறக்கட்டளை நடத்துகிறேன், கூழ் ஊற்றுகிறேன், புத்தகம் போடுகிறேன், புண்ணாக்கு தருகிறேன்இப்படியெல்லாம் கலர் கலராக ரீல் விடுபவர்களை சரியான நேரத்தில் எச்சரித்து விலக்கி வைத்துள்ளது ரஜினி ரசிகர்களின் தலைமை மன்றம்.

“நீங்க மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறீர்களா… அதை நீங்களே நேரடியா செய்ங்க… நான் செய்ய நினைப்பதை நேரடியா நானே செய்வேன். உங்க பாக்கெட்லருந்து நான் பணம் கேட்க மாட்டேன். அப்படித்தான்… நீங்களும் என்கிட்டயிருந்தோ, ரசிகர்களிடமிருந்தோ பணம் கலக்ட் பண்ண முயற்சிக்காதீங்க. உங்களால முடிஞ்சதை செய்யுங்க… இல்லன்னாலும் பரவாயில்லை” -இது ரஜினி தன் ரசிகர் மன்ற சந்திப்பில் கூறியதல்லஎப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தன் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளுக்குச் சொல்வது.

இன்றைக்கு சில பகுதிகளில், மன்றங்களுக்கு சம்பந்தமே இல்லாத சில நபர்கள் ரகசியமாக, பொய்யான சில தகவல்களைக் கூறி வசூலில் இறங்க முயற்சித்து வருவதாகவும், தலைவரின் பெயரைச் சொல்லிக் கொண்டு நிர்வாகிகளைச் சந்திப்பதாகவும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

குறிப்பாக வட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் இதுகுறித்து தலைமை மன்றத்துக்கு புகார்களையும் அனுப்பியுள்ளனர். நேரிலும் தகவல்களைத் தந்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு தலைவரின் 60 வது பிறந்த தினம் என்பதை மிகத் தவறாகப் பயன்படுத்த, மன்றத்தில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சில நபர்கள் முயற்சித்து வருகிறார்கள். இவர்களிடம் ரசிகர்களும் மன்ற நிர்வாகிகளும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எந்தக் காரணம் கொண்டும் இந்த நபர்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், தலைவருக்கு இதுபோன்ற செயல்கள் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தும் என்றும் தலைமை மன்றம் எச்சரித்துள்ளது.

நன்றி :
-சங்கநாதன்
என்வழி.காம்

Friday, August 28, 2009

சுதந்திர தினம்… ரத்ததானம் செய்த சேலம் ரஜினி ரசிகர்கள்!

ரத்த தானம் செய்து சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சேலம் ரஜினி ரசிகர்கள்

சேலம்: ரஜினியின் படம் வெளியாகும் போதுதான் என்றில்லாம், ஒவ்வொரு சிறப்பு நாளிலும் ரஜினி ரசிகர்கள் நற்பணிகள் செய்வது இன்றைக்கு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

12-copy

குறிப்பாக இந்தப் பணிகளை அவர்கள் மேற்கொள்ளும் விதம் ரஜினியே பெருமைப்படும் அளவுக்கு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது என்றால் மிகையல்ல.

சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தினர் தொடர்ந்து பொதுமக்களுக்குப் பயனுள்ள பல நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

சேலம் பொன்னம்மாபேட்டை படையப்பா ரஜினி ரசிகர் மன்றத்தினர் கடந்த மூன்றாண்டுகளாக இந்திய சுதந்திர தினத்தன்று ரத்ததானம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் ரத்த தான நிகழ்ச்சி நடந்தது.

உன்னதமான தலைவர்கள் பலர் ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை தம் ரத்தம் கொடுத்தாவது பேணிக் காப்போம்என்ற கருத்தை வலியுறுத்தவே இந்த நிகழ்ச்சி என பெருமையுடன் காரணம் கூறுகின்றனர் இந்த ரசிகர்கள்.

13-copy

சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த இந்த நிகழ்ச்சியை சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்றத் தலைவர் பழனிவேல் துவக்கி வைத்தார்.

படையப்பா ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் தனபால், மண்டலப் பொறுப்பாளர் துளசிராம், அஸ்தம்பட்டி மண்டலப் பொறுப்பாளற் கனகராஜ், தளபதி ராம், ரமேஷ் உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

12

50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் ரத்த தானம் செய்தனர்.

குறிப்பு: முதல் படத்தில் நீங்கள் பார்க்கும் உடல் ஊனமுற்ற ரசிகர் அமர்ந்திருக்கும் வாகனத்தை அவருக்கு வாங்கித் தந்தவர்கள் படையப்பா ரஜினி ரசிகர் மன்றத்தினர்தான். ஒரு முன்னோட்ட அடிப்படையில் இந்த உதவியைச் செய்துள்ளனர். மேலும் சிலருக்கு இதுபோன்ற வாகனங்களை வாங்கித் தரவும் முடிவு செய்துள்ளனர்.

- பா.அருள், சேலம்
&
- என்வழி.காம்

Thursday, August 20, 2009

எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட சூப்பர் ஸ்டார்!

எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட சூப்பர் ஸ்டார்!

"மத்தவங்க நினைக்கிறதை நான் செய்ய மாட்டேன்...
நான் செய்றத மத்தவங்க எதிர்பார்க்கவும் விடமாட்டேன்!"

-இது சுமார் 17 வருடங்களுக்கு முன் நமது சூப்பர் ஸ்டார் உழைப்பாளி திரைப்படத்தில் கூறியது. இன்றுவரை அதை செயலில் காட்டி வருபவர் நிச்சயம் நமது தலைவராக தான் இருக்க முடியும்..

kuselan_rajini_still_12

தமிழ்நாடே சூப்பர் ஸ்டாரின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்து கிடந்த 95, 96 வருடங்களில், மற்றவர் தரும் வெற்றியில் தான் பங்கு பெறக் கூடாது என்ற வைராக்கியத்தோடு, அமரர். திரு. மூப்பனார் அவர்களை முன்னிருத்தி கலைஞர் அவர்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெறச் செய்தார். மூப்பனாரின் தன்மானம் கெடாமல் பார்த்துக் கொண்டவர், கூடவே தான் ஒரு 'கிங் மேக்கர்' என்பதையும் அதிரடியாக நிருப்பித்தார்.

பாபா திரைப்படத்தைத் திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் சோதனை சோதனை நேர்ந்த சமயத்தில், அவரது அதிரடி அரசியல் பிரவேசம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக, தன்னால் யாரும் நஷ்டப்படக்கூடாது என்று அந்த நஷ்டத்தை ஈடுசெய்து ஒரு ஞானியை போல பொறுமைக் காத்ததோடு, தன் அன்பு ரசிகர்களையும் அவ்வழியே பொறுமை காத்திடச் செய்து வழிநடத்தினார்.

காவேரி பிரச்சனையில் ரஜினி அளவுக்கு வேறு யாருக்காவது சோதனை நேர்ந்திருந்தால் அவர்களால் தாங்கியிருக்க முடியுமா என்பதே சந்தேகம். ஒரு நேரத்தில் திரையுலகமே அவருக்கு எதிராகத் திரும்பியது போன்ற பிரமையை ஏற்படுத்த முயற்சித்து தோற்றது ஒரு கும்பல்... மறு சமயமோ, அவர் கன்னடர்களிடம் கேட்காத மன்னிப்பை கேட்டதாக வெண்டுமென்றே செய்தியாக்கி, குசேலனை சிக்கலுக்குள்ளாக்கி மகிழந்தது இன்னொரு கும்பல்.

இன்றோ... தமிழரும் கன்னடரும் சகோதரர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது உறவு இருக்க வேண்டும். மக்களுக்காக பாடுபடுவோம் என்று கலைஞரும் எடியூரப்பாவும் மாலை மாற்றி போஸ் கொடுக்கிறார்கள்.

இதைத்தானேய்யா எங்க தலைவரும் சொன்னார்... சொல்லிக் கொண்டிருக்கிறார்! இதை இதே தொனியில் சொன்னதற்காகத்தானே நமது தலைவருக்கு எதிராக பெரும் சதி செய்ய முயன்றார்கள்..!

அன்றைய சூழலில் இனியும் பொறுக்க முடியாது என்ற மனநிலை ரசிகர்களிடம் நிலவுவதை அறிந்த சூப்பர் ஸ்டார் தக்க தருணத்திற்காக காத்திருந்து, அவர்களைச் சந்தித்தார். ரசிகர்களும், ஊடகங்களும், ஏன் பொது மக்களும் இந்த முறைக் கண்டிப்பாக ஒரு முடிவை, அறிவிப்பை வெளியிடுவார் என்றே எண்ணினர். ஆனால் அதற்கு மாறாக, தான் இதுவரை மனதில் வைத்து இருந்த செய்தியை மக்களிடமும், ரசிகர்களிடமும் வெளிப்படுத்தினார்.

அது 'அரசியலில் ஜெயிக்க சூழ்நிலையும், சந்தர்ப்புமுமே முக்கியம்' என்பதை எடுத்து கூறி, மேலும் தனது ரசிகர்களுக்கு சமூகத்தில் ஒரு சிறந்த அடையாளம் பெற வேண்டி, முதலில் அவரவர் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுமாறும், அடுத்து நாட்டு நடப்புகளை கவனித்து கற்று தேரவும் அறிவுறுத்தி எந்திரன் திரைப்படம் முடியும் வரை பொறுமைக் காக்க வேண்டுகோளும் விடுத்தார்.

அதற்கு அடுத்து நடைபெற்ற ஈழ தமிழர்களுக்கான உண்ணவிரத்தில் அனைவரையும் கட்டுப்பாடோடு பேசுமாறு அன்பு கட்டளை பிறப்பிக்க, தலைவர் சற்று ஆவேசத்துடன் தமிழர்களின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைத்து சிங்கள வெறியர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

முன்பு ஒரு பத்திரிக்கையில் படித்த செய்தி ஒன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்...

சூப்பர் ஸ்டாரிடம் அவரின் நண்பர்கள், நீ ஏன் அடிக்கடி மாறுவேடம் அணிந்து ஊரை சுற்றுகிறீர்கள் என்று கேட்டதற்கு, சூப்பர் ஸ்டார் "அப்போ தான் மக்களுடன் மக்களாக என்னால் பழக முடியும். இந்த வேடம்தான் மக்களின் மனதை, அவர்களின் பிரச்சனையை, அவர்களின் நிலையையை அறிந்துக்கொள்ள உதவுகிறது" என்றாராம்.

இப்படி, தான் செய்வதை மற்றவர்கள் கணிக்கவும் விடாமல், அவர்கள் கணிப்பதை விட அதிகமாகவே மக்களின், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை திருப்திப்படுத்தி வருபவர் சூப்பர் ஸ்டார்.

அவர் இதைத்தான் செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பதே தேவையில்லாததுதான். காரணம் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதை முற்றிலும் உணர்ந்த ஞானியைப் போன்றவர் அவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து என்ன செய்வார்...?

இந்த கேள்விக்கு விடை...

அவர் நல்லதைச் செய்வார்... அதையும் அதிரடியாகச் செய்வார், தான் நேசிக்கும் தமிழ் மக்களுக்காக!

-ரஜினி ராஜேஷ்

Saturday, August 1, 2009

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

A FRIEND IN NEED IS A FRIEND INDEED
உயிர் காப்பான் தோழன்
மாதா, பிதா, குரு, நல்ல நண்பன் அதுக்கு அப்புறமா தான் தெய்வம்

இப்பழமொழிகளுக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் வாழ்ந்துவருபவர்களில் நமது சூப்பர் ஸ்டாரும், அவரது உயிர் நண்பர்களும் குறிப்பிடத்தவர்கள் என்பது நாம் அறிந்த்தே.

ஒருவரிடம் இருக்கும் திறமையை, ஆற்றலை அவரின் உற்றார் உறவினர்களே மதிப்பு தராத இந்த கலியுகத்தில், அதை பிரதிபலன் பாராமல் வெளிக்கொண்டு வருபவன் ஒரு நண்பனாக தான் இருக்கமுடியும். அதற்கு உதாரணம் தான் இவர்கள்

சிவாஜி ராவ்-விடம் இருந்த நடிப்பு திறமையை பாராட்டி, அதை மேலும் மெருகேற்றி மிளர வைக்க, நடிப்பு கல்லூரியில் சென்று பயில அறிவுருத்தியதோடு நில்லாமல், தன் வருமானத்தில் மாதம் ரூ.100/- அளித்து இன்று உலக சூப்பர் ஸ்டாராக திகழ வித்து இட்டது, மதிற்குறிய திரு. ராஜா பகதூர் அவர்கள் நமது சூப்பர் ஸ்டார் மீது வைத்து இருந்த நட்பு என்பதே உலகறிந்த உண்மை.

இன்றும், அந்த நட்பு மாறாமல், மறாவமல், நமது சூப்பர் ஸ்டார் பெங்களூரு சென்றால், அவரது அரூயிர் நண்பர் வீட்டில் தான் தங்குவதும், அவர் வீட்டு கட்டாந்தரையில் படுத்து உறங்குவதும், கல்லம்கபடமில்லாத நண்பர்களால் மட்டுமே அப்படி இருக்க முடியும்.

இந்த சிறந்த நண்பர்களை மேலும் கௌரவிக்கும் விதமாக, CBSE பாடதிட்டத்தில் சிறந்த நட்பின் உதாரணமாக இவர்கள் நட்பை ஒரு பாடமாக மாணவ செல்வங்களுக்கு புகட்டுகிறார்கள்.

குசேலன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் அருமையாக நடித்து இருந்தார் என்றால், நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் அவர் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருந்தார் என்பதே பொருந்தும் என்று நினைக்கிறோம்.

மேலும், நட்பின் ஆழத்தை,

பாசம் வைக்க, நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க
அவனை தவிர உறவுக்காரன் யாரும் இங்கு இல்ல...
உள்ளமட்டும் தானே உசிரக்கூட தானே
என் நண்பன் கேட்ட வாங்கிக்கன்னு சொல்லுவேன்...
என் நண்பன் போட்ட சோறு தின்னமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்...

நிஜ வாழ்க்கையில் அனுபவத்துக்கொண்டிருபவர் வாய்பட கேட்க, கேட்க இனிமை தான்....

தெய்வத்தின் பால் கொண்ட பக்தியை காட்டிலும் நல்ல நண்பனின் மேல் வைக்கும் நட்பு வலியது என்று சொல்லில் மட்டும் கூறாது, தங்களது வாழ்விலும் கடைப்பிடித்து வாழும் அந்த நல்ல உள்ளங்களை போல வேற்றுமை நீங்கி, ஒற்றுமையோடு வாழ இந்த இனிய நண்பர்கள் தினத்தில் உறுதி கொள்வோமாக!

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

-ரஜினி வாரியர்ஸ் டீம்.