Friday, September 25, 2009

சூப்பர் ஸ்டார் செல்லும் பாபா குகையை நோக்கி பயணம்....

சூப்பர் ஸ்டார் செல்லும் பாபா குகையை நோக்கி பயணம்....


















அறிந்தோ, அறியாமலோ விஜய் டி.வி-யினர் சூப்பர் ஸ்டாரின் மகுடத்திலே மேலும் ஒரு வைரக்கல்லை சேர்த்துவிட்டனர்.

ஆம். பாபா திரைப்படம் வெளியான சமயத்தில் எத்தனை நபர்கள் எள்ளி நகையாடினர். தலைவரிடமிருந்து அதிரடியை எதிர்ப்பார்த்த நம் சக ரசிகர்களிடத்திலே கூட ஒரு சிறு மன வருத்தம். இதற்கும் மேலே ரசிகர்கள் என்ற போர்வையில் அந்த சரித்திர திரைக்காவியத்தை விமர்சனம் என்ற பெயரிலும், தன் அனுபவம் என்ற பெயரிலும் புழுதி வாரி தூற்றியதும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. பாவம், அப்படி எள்ளி நகையாடியவர்களுக்கும், விமர்சித்தவர்களுக்கும் அக்காவியத்தின் உள் அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அன்று விமர்சித்த அந்த உள்ளங்களே இன்று இந்த நிகழ்ச்சியை காண குடும்ப சகிதமாய் அமர்ந்து, முக்கிய வேலைகளையும் ஏன் தொலைபேசி அழைப்புகளையும் தவிர்த்து கண்டு ரசிக்கிறார்கள் என்றால் மிகையாகது.

அக்காவியத்தில் கூறப்பட்ட பல விவரங்கள் (அட! ஒவ்வொறு சீன்களிலும் ஒரு விவரம் இருக்குங்க) வேறு எந்த திரைப்படத்திற்கும் பொறுந்தக்கூடிய விஷயமல்ல. அப்படி ஒரு தகவல்களை போகிற போக்கில் அள்ளி தெரித்து இருப்பார் நமது சூப்பர் ஸ்டார்.

உதாரணமாக, நாம் அன்றாட வாழ்வில் செய்யும் பல செயல்களில் ஆசனங்கள் (யோகசனம்) இருக்கு என்பதை விவரித்து இருப்பார். கஷ்டப்பட்டு செய்யும் உடற்பயிற்சி காட்டிலும் இஷ்டப்பட்டு செய்யும் யோகசனத்தின் பலன் மிக பெரியது என்று சொல்லாமல் சொல்லி இருப்பார் தலைவர். தியானத்தின் மகத்துவத்தையும் இமயமலையில் மஹாஅவதார் பாபாஜி அவர்கள் தோன்றும் காட்சியில் அழகாக உணர்த்தி இருப்பார்.

குறிப்பாக, அவர் உபயோகிக்கும் க்ரியா யோக முத்திரை. அம்முத்திரையை பற்றி அழமான விவரங்களை வெளியிடாவிட்டாலும், சாமான்ய மக்களும் பாபா முத்திரையை அறிய வைத்தார். முத்திரைகளில் பல வகை உண்டு. அவற்றில் உச்ச பலனை கொடுக்கும் முத்திரைகளுள் ஒன்று தான் நாம் பார்த்து ரசித்த அந்த பாபா முத்திரை.

திரைப்படத்தை விடுங்கள். சூப்பர் ஸ்டார் எந்த மேடையில் வீற்றிருந்தாலும், அவர் கை விரல்களை பார்த்தோமே ஆனால் ஏதாவது ஒரு முத்திரையை பிடித்து இருப்பார். அப்படி என்ன விஷேசம் அந்த முத்திரைகளில். பலருக்கு தெரிந்த விவரமே என்றாலும் ஒரு நினைவூட்டலே இந்த பதிவு.

சரி, முத்திரை என்றால் என்ன?
நம் ஐந்து விரல்களும் பஞ்ச பூதங்களை குறிக்கும். அவற்றை ஒன்றோடு ஒன்றை இணைப்பதன் மூலம் நம் புற உடம்பையும், அக ஆன்மாவையும் எந்த தீதும் நெறுங்காவண்ணம் தடுக்க முடியும். அவ்வாறு விரல்களை முறையாக இணைக்கும் விதம் தான் முத்திரை என்பது.

நாட்டியங்களில் கூட எண்ணங்களை நடனங்களில் எடுத்து கூற உதவுவது முத்திரையே. அப்படி தான் நம் உடல் ஆரோக்கிய தேவைகளையும், ஆன்ம ஆரோக்கிய தேவைகளையும் பூர்த்தி செய்வது தான் முத்திரை.

பஞ்சபூதங்களை குறிக்கும் விரல்கள் :
கட்டை விரல் - நெருப்பு ஆள்காட்டி விரல் - காற்று நடுவிரல் - ஆகாயம் மோதிர விரல் - நிலம் சுண்டு விரல் - நீர்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் சூப்பர் ஸ்டாரை சந்தித்த ஒரு பாக்கியசாலி அளித்த பேட்டியில் நமது விரல்களின் அர்த்தங்களை பற்றி சூப்பர் ஸ்டாரிடமிருந்து தெரிந்து கொண்டதாகவும், அதை மக்களோடு பகிர்ந்துக்கொள்வதாகவும் கூறினார். அது.

சுண்டு விரல் - பெண் ஆசை - திருமண விபவத்தில் மணமகனின் சுண்டு விரலையும், மணமகளின் சுண்டு விரலையும் தானே இணைக்கிறார்கள்.

மோதிர விரல் - பொன் ஆசை - பெயரிலேயே உள்ளது - அதில் தானே தங்க ஆபரணங்கள் அணிகிறோம்.


நடுவிரல் - மண் ஆசை


ஆள்காட்டி விரல் - ஆன்மா - ஒருவரை (ஆன்மாவை) சுட்டிக்காட்ட பயன்படுத்தும் விரல்.

கட்டை விரல் - பரம்பொருள் - எந்த விரல் இல்லையென்றாலும் நம்மால் வேளை செய்துவிடமுடியும், ஆனால் கட்டை விரல் இல்லையென்றால், நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்து விடமுடியாது.


இப்படி இந்த மூன்று ஆசைகளையும் வெறுத்து, ஆன்மாவை பரம்பொருளோடு இணைப்பதன் மூலம் மூக்தி அடையலாம். உதாரணம், தவம் அல்லது தியானம் செய்யும் பொழுது அவர்கள் உபயோகிக்கும் முத்திரை.



ஆக, நம் உடல் ஆரோக்கியம் ஆகட்டும், ஆன்ம ஆரோக்கியம் ஆகட்டும், அதை நாமே நிவர்த்தி செய்துக்கொள்ளலாம். உதாரணமாக, தலைவலியைக்கூட நம் விரல்களை அதற்கேற்றார் போல் இணைப்பதன் மூலம் எந்த மருந்து, மாத்திரைகள் இல்லாமல் போக்கலாம்.

அது எப்படி சாத்தியம்?............. அடுத்து பதிவில் பார்ப்போம்

நன்றி
- கணேஷ்.எஸ்.என்.

Monday, September 21, 2009

மலடா..... அண்ணாமல......

20.09.2009
இந்த
நாள்...... சத்யம் திரையரங்கம் அதிர்ந்த நாள்...
காரணம் அண்ணாமலை திரைப்படம்

நண்பர்களுடன் தலைவர் படங்களை பற்றி பேசும் பொழுதெல்லாம் திரைஅரங்கிலே சென்று பார்க்க முடியாமல் போன படங்களை பற்றி ஏக்கத்துடன் பேசுவது உண்டு. அப்படி பேசும்பொழுதெல்லாம் தவறாமல் இடம் பெறும் படம் அண்ணாமலை. ஆனால் அக்குறை நேற்றோடு தீர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

அப்படி ஒரு அனுபவம் நேற்று நேர்ந்தது.

குழம்பிய பொதுமக்கள் :
காலை சுமார் 8:20 மணி அளவில் சத்யம் வளாகம் நமது ரசிகர் நண்பர்களால் கலை கட்டி இருந்தது இரண்டு 1000 வாலா சரவெடியுடன் கொண்டாட்டம் துவங்கியது. சத்யம் திரையரங்கை கடந்து செல்வோர், இன்று ஏதாச்சும்.... சூப்பர் ஸ்டாரின் புதுப்படம் ரீலிசோ என்று குழம்ப செய்தது அந்த கொண்டாட்டம்...

உற்சாகத்துடன் உள்ளே சென்று அமர்ந்து ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தோம்.....



சொதப்பிய
சத்யம் :
கவிதாலயா என்று டைட்டில் கார்ட் போட்டவுடன் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தார்கள் ஆனால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டை போடாமல் சொதப்பியது சத்யம்....ரசிகர்கள் அனைவரும் டைட்டில் கார்டை போடச்சொல்லி குரல் எழுப்பியும் எந்த பலனும் இல்லை.....வீனாய் போனவர்கள்..... இருங்கப்பு.... எந்திரன், சுல்தான்ன்னு வரிசையா இருக்கு.......

வந்தேண்டா பால்காரன்....
படம் துவங்கியதும் சிறு வயது அண்ணமலை அறிமுக காட்சியில் ரசிகர்களின் விசில் பறந்தது.....சிறு வயது அண்ணாமலைக்கே இப்படினா தலைவர் அறிமுகம் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்.

வந்தேண்டா பால் காரன் பாடல் ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கத்த துவங்கினார்கள்.....தலைவர் முகத்தை பார்த்தவுடன் பேப்பர் தூவி நடனம் ஆடினார்கள். இன்னும் சிலர் தங்கள் சட்டையை கழட்டி சுற்றினார்கள்..... 'என்னை வாழ வைத்தது தமிழ் பாலு' என்று தலைவர் பாடும் பொழுது விசில் சத்தமும் ரசிகர்கள் எழுப்பிய சத்தமும் அடங்க வெகு நேரம் ஆனது....

அதிர்ந்த சத்யம் திரையரங்கம் :
இதற்கு பிறகு ஒவ்வொறு காட்சி ஒவ்வொறு வசனத்திற்கும் கை தட்டல் தான்.... எத்தனை முறை ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தார்கள் என்ற கணக்கே கிடையாது. திரை அரங்க ஊழியர்கள் எத்தனை முறை வந்து சொல்லியும் நம் ரசிகர்களை அடக்க முடியவில்லை

தலைவர் படம்னா தியேட்டர் அதிரும் அத யாராலயும் தடுத்து நிறுத்த முடியாது. சரத் பாபு நிலத்தை கேட்டவுடன் தலைவர் எடுத்துக்கோ என்று சொல்வார் அதற்கு சரத் பாபு இந்த இடத்ததான் நீ யாருக்குமே தர மாட்டியே என்று சொல்ல தலைவர் இப்ப மட்டும் என்ன இந்த இடத்த யாராவது கேட்டா இல்ல ச்சும்மா பார்த்தாலே போதும் தொலச்சிடுவன் ஆனா நீ யாருடா என் அஷொக் டா என்று சொல்லும் போது நம்மை அறியாமல் நம் கண்கள் கலங்கின....

தலைவர் தலைவர் தாண்டா
முதல் பாதி வரை விசில் ஆரவாரம் ஒன்ஸ்மோர் இவற்றோடு ரகளையாய் முடிந்தது.... இடைவேளையின் பொழுது அனைவர் முகத்திலும் அவ்வளவு சந்தோஷம். சில பெண் ரசிகர்களையும் பார்க்க முடிந்தது.

TCSல் பணிபுரியும் ஒரு பெண் ரசிகர் 'தலைவர் படம்னா சும்மாவா.... தொடர்ந்து நாலு ஷோ போட்டாகூட பார்க்கலாம்' என்று சொல்லி நம்மை ஆச்சர்யபடுத்தினார்.

அனல் பறக்க வைத்த தலைவரின் வசனங்கள் :
இரண்டாம் பகுதி படம் பற்றி சொல்லவே தேவை இல்ல
ஒவ்வொரு வசனத்திற்கும் கை தட்டல்கள் விசில் ஒண்ஸ் மோர் தான்...

உதாரணத்திற்கு சில
சவால் விடும் காட்சி....இந்த காட்சியில் தலைவரின் கோபம் ஆவேசம் ஆக்ரோஷம் ஆகியவை சிலிர்க்க வைத்தன....

"வக்கீல் சார் ஆண்டவன் கோர்ட்டுனு ஒண்ணு இருக்கு அங்க இந்த அண்ணாமல நிச்சயம் ஜெயிப்பான் சார்"

"வெற்றி நிச்சயம் பாடல்...." என்ன ஒரு வரிகள்.
தலைவருக்கு மட்டுமே பொருந்தும் வரிகள்.

தலைவர் சேர்மேனாக பதவி ஏற்கும் காட்சி,
'என்னா style தலைவா....'

ஏலம் எடுக்கும் காட்சி அதை தொடர்ந்து வரும் கணக்கு dialogue
தலைவர் மேலே செல்ல சரத்பாபு கீழே இரங்க இறுதியில் மல டா அண்ணமல என்று சொல்லும் போது அரங்கமே அதிர்ந்தது

கிளைமேக்ஸ் :
இப்படி கிளைமேக்ஸ் வரை தலைவர் போன் எடுத்தாலும் அதிருது... கையால் நெருப்பை அனைத்தாலும் அதிருது... மொத்தத்தில் படு ரகளையாக படம் முடிந்தது.

படம் முடிந்து இருக்கையில் இருந்து எழுந்து வரும் போது அனைவரும் ஒட்டு மொத்த குரலில் "தலைவர் வாழ்க! வருங்கால முதல்வர் வாழ்க!!" என்று கோஷம் எழுப்பினார்கள்

கும்தலக்கடி.... கும்மாவா....
திடீரென்று உற்சாக மிகுதியில் 'தலைவா!' 'தலைவா!!' என்று நடனம் ஆட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்த திரையரங்க ஊழியர்கள் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் முடியவில்லை.

"கு ம் த ல க் க டி கு ம் மா வா ... த லை வ ரு ன் னா சு ம் மா வா...." என்று ஆடியபடியே இரண்டாம் தளத்திலிருந்து கீழ் தளம் வரை வந்தார்கள் கீழே வந்த பிறகும் ஆட்டம் குறையவில்லை.

வியந்த திரையரங்க ஊழியர்களும், பொதுமக்களும் :
ரசிகர்களின் கொண்டாட்டத்தை கண்ட சத்யம் ஊழியர்கள்..... 'சூப்பர் ஸ்டார் படம்முன்னதம்பா இந்த கலை கட்டுது' என்று பேசியது நம் செவிகளுக்கு மேலும் ஒரு உற்சாகம் தந்தது.

நம் ரசிகர்களின் உற்சாக ஆட்டத்தை மற்ற படத்தினை காண வந்த அனைவரும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

மீண்டும் சந்திப்போம்
பின்னர் ரசிகர்கள் அனைவரும் மகிழ்சியுடனும் உற்சாகத்துடனும் பிரிந்து சென்றனர்.
மொத்தத்தில் சத்யம் வளாகமே விழா கோலம் பூண்டது என்றால் மிகையாகது.

"இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் தலைவர், தலைவர் தான்
எவனாலும் அவரை அசைக்க முடியாது"

"ஏன்னா...... தலைவர் மலடா....."
-மித்ரா

Saturday, September 19, 2009

ராகுல் பேச்சுக்கு ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?

எப்பவும் தலைவர் வழி தனிவழிதான்..!- ரசிகர்கள்

ரஜினியை காங்கிரசில் சேர ராகுல் காந்தி அழைத்த விதம், பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து நாம் ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளோம்.

அவரது அழைப்புக்கு ரஜினி தன் பாணியில் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இப்போது, நமது ரசிக நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போமா

p6

வலசை எம்.ரஜினி ஆனந்த் (திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர், ரஜினி தலைமை ரசிகர்மன்றம்):

”விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி, ஆளுங்கட்சித் தலைவர்கள் எல்லாம் ‘தண்ணீர் பிரச்னைக்கு நிர்ந்தரத் தீர்வு, தேசிய நதிகளை இணைப்பதுதான்’னு புரிஞ்சுக்கிட்டாங்க. அதன்படிதான் எங்க தலைவர் ரஜினியும் தன் கருத்தைத் தெரிவிச்சாரு.

இப்போ, ராகுல்காந்தி திடீர்னு ‘நதிகளை இணைச்சா, இயற்கை சூழலுக்கு ஆபத்து ஏற்படும்’னு சொல்றது, அவர் தனிப்பட்ட கருத்து. அது பத்தி நாங்க ஏன் கவலைப்படணும்?”

ரஜினி டில்லி (சென்னை அண்ணாநகர் ரஜினி மன்ற செயலாளர்):

”ராகுல் வளர்ந்து வர்ற தலைவர். சில விஷயங் கள் அவருக்கு இன்னும் புலப்படலை.

ஏதோ ஆவேசத்துல அரைவேக்காட்டுத்தனமா சில வார்த்தைகளை விட்டுட்டாரு. பி.ஜே.பி. போன்ற கட்சி களின் முக்கியஸ்தர்கள் ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிச் சிருக்காங்க. ஏன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவே ராகுல் கருத்தை அவரோட தனிப்பட்ட கருத்துன்னு சொல்லிட் டாரே…”

‘தளபதி’ ராமு (ரஜினி ரசிகர் மன்ற மண்டலத் தலைவர், சூரமங்கலம், சேலம்):

”இமயம் முதல் கன்னியாகுமரி வரை பார்த்தவரு எங்க தலைவரு. நதிகளை இணைக்க முடியுமா, முடியாதான்னு அவருக்குத் தெரியாதா..?

‘முடியாது’ன்னு அவசரப்பட்டு சொன்னதுக்கு ராகுலும் காங்கிரஸும் வெட்கப்படணும்.

அது மட்டுமில்லாம, ‘ரஜினிகாந்த் ஒரு குற்றவாளி கிடையாது. அதனால அவரை காங்கிரஸ்ல சேர்த்துக்கறதுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது’ங்கிற ரீதியில் ஓவரா பேசியிருக்காரு!

ரஜினி குற்ற வாளியா இல்லையானு இவர்கிட்ட யார் சர்டிஃபிகேட் கேட்டது..? நீங்க கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும், எங்க தலைவர் உங்க கட்சிக்கு வர மாட்டாரு. ஏன்னா, எப்பவும் எங்க தலைவர் வழி, தனி வழிதான்..!

p7a

திருமாறன் (ரஜினிகாந்த் ரத்ததானக் கழக நிறுவனர், திருநெல்வேலி):

”எங்க தலைவரின் பேச்சுக்குப் பிறகுதான் நதிநீர் இணைப்பு விஷயம் பொது விவாதமாக எழுந்தது. இது பத்தியெல்லாம் தெரிஞ்சுக்காம… ராகுல் சொல்லியிருக் குறது கண்டனத்துக்குரியது. நேரு, இந்திரா, ராஜீவ்னு பெரிய அரசியல் பாரம்பரியத்துல வந்த அவர் இப்படிப் பேசினது சரியில்லை! உடனடியாக அவரோட இந்தக் கருத்தை வாபஸ் வாங்கணும்!”

‘ரஜினி’அருள் (ரஜினி ரசிகர், மணக்காடு- ஆத்தூர்):

”ராகுல் வரவு காங்கிரஸ்ல புது உற்சாகம் தந்திருக்கு… ஆனா, நதிநீரை இணைக்க முடியாதுன்னு பேசியிருப்பது, தென்மாநில மக்கள் மத்தியில் காங்கிரஸுக்குப் பெரிய பின்னடைவை உண்டாக்கும். இது ராகுல் காந்தி தானாகப் பேசினது மாதிரி தெரியல. காங்கிரஸ்ல இருக்கிற வேற யாரோ சிலர்தான் தூண்டிவிட்டுப் பேச வெச்சிருக்ணும். எப்படியோ, வாயைக் கொடுத்து வம்புல மாட்டிக்கிட்டாரு. தலைவரை எதிர்த்த யாரும் அரசியல்ல நிலைச்சு நின்னதா சரித்திரமே இல்லை..!”

ஜாஃபர் (தலைவர், மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம்):

”ராகுலோட பேச்சைக் கேட்டுக் கொதிச்சுப் போய், எங்க மன்றத் தலைமையிடம் பேசினேன். நதிநீர் இணைப்புக் கொள்கையில் தலைவர் இப்பவும் உறுதியாகத்தான் இருக்கிறாராம். இருந்தாலும், இந்தியத் திருநாட்டையே ஆளக்கூடிய இடத்தில் இருக்கும் ராகுல், விஷயம் தெரியாமல் இப்படியரு கருத்தைச் சொல்லியிருப்பாரான்னு தலைவர் ரஜினி ரொம்பவே யோசிச்சிட்டு இருக்காராம். ‘நதிநீர் இ¬ணைப்பின் சாதக-பாதகங்கள் பத்தி வல்லுநர்களிடம் கேட்போம். அவர்களது கருத்துகள் நம்முடை யதோடு ஒத்துப்போனால் ராகுலுக்கு பதில் கொடுப்போம். அதுவரை பொறுமையாக இருங்க’னு மன்றத்துல சொல்லியிருக்காங்க! அதனாலதான் பொறுமையா இருக்கோம். இல்லாட்டி…!”

பிரேம்நாத் (மாவட்ட செயலாளர், ரஜினிகாந்த் நண்பர்கள் நற்பணி மன்றம்-கோவை):

“மாநிலங்களுக்கு இடையே நதிநீரை பங்கீடு செய்வதிலேயே பிரச்னைகள் முடிந்தபாடில்லை. பிறகெப்படி தேசிய அளவில் நதி இணைப்பு சாத்திய மாகும்? நதிகளை இணைத்தால், மொத்த நாடும் வளம் பெறும் என்பது உண்மைதான். ஆனால், விவசாய நிலங்களை எல்லாம் கான்க்ரீட் காடுகளாக்கிட்டோம். விவசாயம் செய்ய எங்கே நிலம் இருக்கிறது? ‘நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தரத் தயார்’ எனச் சொன்னது, தலைவரின் பெருந்தன்மை. மத்தபடி, ராகுல் தன் கருத்தாகச் சொன்னதுலயும் தப்பு இருக்குற மாதிரி எனக்குத் தெரியலை…”

http://www.envazhi.com/wp-content/uploads/2009/09/p7.jpg

பாலநமச்சி (ரஜினி மன்ற செயலாளர், ராமநாதபுரம்):

”நாட்ல தண்ணீருக்காக எவ்வளவு பிரச்னைகள்… எல்லோரும் தொடர்ந்து ஒத்துமையா இருக்க, நதிகளை இணைக்கறதுதான் ஒரே வழி. அதுக்காகத்தான் ரஜினி முயற்சி எடுத்தாரு. கேட்ட குரலுக்கு பாட்டில் தண்ணீர் கொண்டுவந்து குடித்தே பழகிய ராகுலுக்கு, குடிதண்ணிக்காக மக்கள் படுற கஷ்டம் தெரி யுமா? ராகுலை மறந்துட்டு, நதிகளை இணைக்கிற வழியைத்தான் எல்லோரும் யோசிக்கணும். அதான் இப்ப முக்கியம்…”

ரஜினி வீரமணி (நகர செயலாளர், ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், மயிலாடுதுறை):

”எங்க தலைவர், ஏழைகள் வாழணும்னுதான் நதிகளை இணைக்கணும்னு சொன்னாரு. அதுக்காக ஒரு கோடி என்ன… அஞ்சு கோடிகூட கொடுப்பாரு! தமிழகம் முழுக்க உள்ள எல்லா ரசிகர்களும் முடிஞ்சதைக் கொடுப்போம்.

பி.ஜே.பி. ஆட்சி தொடர்ந்திருந்தா, நிச்சயம் நதி நீரை இணைச்சிருப்பாங்க. பி.ஜே.பி. ஆட்சியில் பேசப்பட்ட திட்டம் என்ற அரசியல் பார்வையோடுதான் ராகுல் அதற்கு மாறாகப் பேசியிருப்பாருனு நினைக்கிறேன்!’

நன்றி-விகடன்
மற்றும்
என்வழி.காம்

Saturday, September 12, 2009

அடுத்தவர் புகழில் குளிர்காய நினைக்கும் ராகுல் காந்தி என்ற அரைவேக்காடு!

அடுத்தவர் புகழில் குளிர்காய நினைக்கும் ராகுல் காந்தி என்ற அரைவேக்காடு!

சமீபத்தில் சென்னை வந்த ராகுல் காந்தி எம்பி, பத்திரிகையாளர்களின் ஒரு முக்கிய கேள்விக்கு அளித்த பதில் இது:

rahul

*நடிகர் ரஜினிகாந்தை காங்கிரசில் சேர்க்கும் எண்ணம் உள்ளதா?

நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். யாரும் இதில் சேரலாம். அப்படி காங்கிரசில் அவர் சேர்ந்தால் அதிக மகிழ்ச்சி. ரஜினிகாந்த் ஒரு குற்றவாளி அல்ல. அவரை சேர்வதை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்போம். அவர் வருவதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால் நாங்கள் குறிப்பிட்ட யாரையும் குறிவைத்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தவில்லை. குற்றப் பின்னணி இல்லாதவர்கள் சேர்வதற்கு கதவு திறந்து வைக்கப்பட்டு உள்ளது (தினத்தந்தி)

** நடிகர் ரஜினி கட்சியில் சேருவாரா?

ரஜினி, குற்றப் பின்னணி கொண்டவர் கிடையாது. அவர் முன்வந்தாலும் முழு மனதுடன் வரவேற்போம். (தினமலர்)

இந்த பதில் குறித்த நமது கருத்தைப் பதியும் முன், இந்த அரைவேக்காட்டு வாரிசு தமிழகத்துக்கு வருவதையொட்டி எழுப்பப்பட்ட பிம்பங்களைப் பாருங்கள்…

‘ராகுல் சென்னைக்கு வருகிறார்… ரஜினியைப் பார்க்கிறார்… அடுத்து ஆட்சியைப் பிடிக்கிறார்!’ - இது குமுதத்தின் டெஸ்க் ஒர்க்.

‘ராகுல் காந்தியைப் பார்க்க ரஜினி ஒப்புக் கொண்டார். இருவரும் இதோ சந்திக்கப் போகிறார்கள்… கருணாநிதி குடும்பத்திடமிருந்து பிடுங்கி சோனியா காந்தி குடும்பத்துக்கு தமிழ்நாட்டை பட்டா எழுதி தரப்போகிறார்கள் தமிழக வாக்காளர்கள்!’- இது இன்னும் சிலரது மோசமான கற்பனை.

இந்த அரைவேக்காடு, பத்திரிகையாளர்களிடம் ரஜினி பற்றிப் பேசும்போது பயன்படுத்தியுள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள். “ரஜினிகாந்த் ஒரு குற்றவாளி அல்ல. அவர் சேர்வதை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்போம். குற்றப் பின்னணி இல்லாதவர்கள் சேர்வதற்கு கதவு திறந்து வைக்கப்பட்டு உள்ளது…”

-தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் என்பது ஒரு அரசியல் அனாதை. சவாரி செய்ய திமுக - அதிமுக என ஏதாவது ஒரு தோள் இருப்பதால்தான் இந்த சவலை ஜந்து இன்னும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. இல்லையேல் அது செத்த இடத்தில் புல் முளைத்துப் புதர் மண்டியிருந்திருக்கும்.

இந்தக் செல்லாத கட்சியில் சேர ரஜினி என்ற மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு பிரமுகரை அழைக்கும் விதம் இதுதானா… !

இதற்கெல்லாம் உச்சம் ராகுல் காந்தியின் இந்த மோசமான பேச்சுக்கு இன்னும் சில வெந்தும் வேகாத மண்டையர்கள் கைதட்டி விசிலடிக்காத குறையாக மகிழ்ந்து கொண்டிருப்பது. விஜய் - விஜய்காந்துக்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை, இந்த அரைவேக்காடு ரஜினிக்குக் கொடுத்துவிட்டதாம். அதனால் இவர்களுக்கு சந்தோஷம். இனத்தைக் காமுறும் இனம் என்பது இதுதான் போலிருக்கிறது!

அட கண்றாவியே… எதற்கு சந்தோஷப்படுவது என்ற விவஸ்தையே கிடையாதா?

உங்கள் வீட்டுப் பெண்ணைப் பார்த்து ஒருவன்… “எனக்கு விபச்சாரிகளைப் பிடிக்காது. நீ விபச்சாரி இல்லை. எனவே என் வீட்டுக்கு வா” என்று அழைத்தால் என்ன செய்வீர்கள்? ஆஹா… என்ன பிரமாதமான அழைப்பு… இதுவல்லவா மரியாதை என புல்லரித்துப் போய்விடுவீர்களா?

ராகுல் காந்தி ரஜினியை அழைத்த விதத்துக்கும் மேலே நாம் குறிப்பிட்ட உதாரணத்துக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

ரஜினி என்ன இவரைத் தேடிப்போய் பார்த்தாரா…? அல்லது காங்கிரஸ் அரசியல் பற்றித்தான் ஏதாவது கருத்து கூறினாரா? வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று கூற, அவரென்ன அட்மிஷனுக்குக் காத்திருக்கிறாரா?

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், மக்கள் தலைவர் மூப்பனார், வாஜ்பாய், சந்திரபாபு நாயுடு என எத்தனையோ தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆன்மீகவாதிகள்… அட 12 ஆண்டுகளாகக் காத்திருக்கும் ரசிகர்கள் என எவ்வளவோ பேர் அவரை அரசியலுக்கு வரச் சொல்லியும் ரஜினி அமைதியாக தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டு அரசியலே தன்னைச் சுற்றி இயங்கும் அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட ஒருவரைப் பற்றிப் பேசும் முறையா இது!

ஆனால் இதே ரஜினியை, இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளர், முன்னாள் துணைப் பிரதமர் என்ற அந்தஸ்தில் இருந்த எல் கே அத்வானி வீடு தேடிப் போய் பார்த்தார் (பாஜக நமக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்…). அதுதான் பண்பாடு… மரியாதை!

இனப் படுகொலைக்கு துணைநிற்கும் ஒரு குடும்பத்து வாரிசிடம் அதை எதிர்ப்பார்ப்பது தவறுதான். நல்ல வேளை… எப்போதும் சரியான நேரத்தில் சரியான, நியாயமான முடிவை எடுக்கும் ரஜினி, இம்முறையும் இந்த காங்கிரஸ் ஓநாயைச் சந்திக்காமல் தவிர்த்து, தமிழர் உணர்வுக்கு மரியாதை தந்தார்.

ஆனால் ராகுல் என்ற இந்த தப்பான நபருக்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்கும் ‘சொந்த சோதரர்களின் சிந்தை காணும்’ நேரமெல்லாம் நெஞ்சு பொறுக்குதில்லையே… இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்!

குறிப்பு: விஜய் - விஜய்காந்தை நமக்குப் பிடிக்குமா இல்லையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். ஆனால் இந்த இருவரும் கூட கஷ்டப்பட்டு சேர்த்து வைத்ததுதான் இந்த புகழ் வெளிச்சம். சும்மா வந்துவிடவில்லை. அதை எத்தனை சுலபத்தில் களவாடப் பார்க்கிறார் இந்த அரைவேக்காடு ராகுல்!

இந்த இரு நடிகர்களும் நிஜமாகவே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்… ‘முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்ற பாரதியின் கோபத்தைக் காட்டியிருக்க வேண்டாமா… ஆனால் இவர்களோ காங்கிரஸ் எனும் வியாபாரிகளோடு பேரம் பேச துண்டோடு காத்திருக்கும் போது நாம் என்ன சொல்லி என்ன பண்ண… விதி வலிய…து!

நன்றி!
-விதுரன்
என்வழி.காம்

Thursday, September 10, 2009

ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

நமது சூப்பர் ஸ்டார் சமீபத்தில் கலந்து கொண்டு ரசிகர்கள் மட்டுமல்லாது திரைநட்சத்திரங்களையே குதுகுலப்படுத்திய நிகழ்வுகள், 1) நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நாடக விழாவையும், 2) 80களின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பெற்ற மலரும் நினைவுகள் நிகழ்வும்தான் இப்போழுது கலைஞர் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகள் ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்பெஷல் டீரீட்.

dsc_0632

இந்த ஸ்பெஷல் நிகழ்ச்சியைப்பற்றி சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகிகளைத் தொடர்புக் கொண்டு நாம் விசாரித்தபோது அவர்கள் கூறிய விவரங்கள் உங்களுக்காக…

முதலில், கலைஞர் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் டைமண்ட் பாபு அவர்களை தொடர்புக்கொண்ட போது, “நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நாடக விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியையும், அதில் பங்கேற்ற சூப்பர் ஸ்டாரின் சிறப்புரையையும் தொகுத்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக விரைவில் கலைஞர் டி.வியில் ஒளிப்பரப்பவிருக்கிறோம். இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ஆற்றிய உரை சமீபத்தில் அவர் நிகழ்த்திய உரைகளில் குறிப்பிடத்தக்கதாகும். திரை கலைஞர்களே சூப்பர் ஸ்டாரின் பேச்சில் ஆர்ப்பணித்தனர் என்றால், ரசிகர்களுக்கு கேட்கவா வேண்டும்!” என்றார்.

அடுத்து, ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜேக்கப்புடன் பேசினோம்.

“1980களின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட கெட்-டு-கெதர் நிகழ்ச்சி ஜெயா டி.வி.யின் சார்பாக நான்கு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமே சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் வருகைதான். ஆரம்பத்திலேயே வந்துவிட்ட அவர், அனைவருடனும் உற்சாகமாக பழைய நினைவுகளை பேசி, மிக ரிலாக்ஸ்டாக இருந்தார்.

ss-party

அவர் இத்தனை சகஜமாக தங்களுடன் இருப்பார் என பல கலைஞர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. நிகழ்ச்சி முடியும் வரை அந்த உற்சாகம் குறையாமல் நீடித்ததற்கு காரணம் ரஜினி சார்தான். இந்த நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக வழங்கத் திட்டமிட்டுள்ளார்கள்…”, என்றார்.

‘இலையா… சூரியனா’ என்பதல்ல இப்போது முக்கியம்… இரண்டு நிகழ்ச்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒரே நாளில் வராமல் இருக்க வேண்டுமே!

- ரஜினி ராஜேஷ்

Tuesday, September 8, 2009

புத்துயிர் பெறும் மன்றங்கள்… நற்பணியில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்!

அம்மாபேட்டை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரசிகர்கள்!

ரஜினி ரசிகர் மன்றங்கள் புதிய எழுச்சி பெற்று வருவதை அடிக்கடி செய்திகளாக நாம் கொடுத்து வந்துள்ளோம்.

dsc_04261

dsc_0428


dsc_0483


சில தினங்களுக்கு முன், ‘புதிய மன்றங்களுக்கு அனுமதி தரத் தலைவர் முடிவெடுத்துவிட்டார்’ என்ற செய்தியைப் பதிவு செய்திருந்தோம்.

இப்போது அதன் முதல் கட்டமாக, ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு இடையில் செயல்படாமல் இருந்த சில மன்றங்களை முழுவீச்சில் இயங்க வைக்கும் வேலைகள் மாவட்டம்தோறும் வேகம் பெற்றுள்ளன.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் சமீபத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டது.

முன்பே ஆரம்பிக்கப்பட்ட மன்றம்தான் என்றாலும், இடையில் சில காலம் செயல்படாமல் இருந்தது. இப்போது அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை உள்ளடக்கிய பெரிய மன்றமாக இது மாற்றம் பெற்றுள்ளது.

இதில் சுவாரஸ்யமான விஷயம், உறுப்பினர்களாக உள்ள ரசிகர்களின் வயது.

சில அறிவு ஜீவிகள் பொதுவாக வைக்கும் கேள்வி… ரஜினிக்கு வயதாகிவிட்டது. இனி அவர் எப்போது அரசியல் இயக்கம் காண்பது? அவருக்கு இளைஞர்கள் மத்தியில் முன்பு போல செல்வாக்கு இருக்குமா? என்பது.

dsc_0449


ஆனால் ரஜினி என்ற கலைஞருக்கு, ரசிகர்களின் தலைவருக்கு வயது வரம்பே கிடையாது. அவர் வயதை வென்றவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 30 வயதுக்குட்டப்பட்ட இளைஞர்களே. அதேநேரம் ஆரம்ப கால உறுப்பினர்களும் உள்ளனர்.

மன்றத்தின் துவக்கவிழா நடந்த நாளன்று அம்மாபேட்டை பகுதியே அதிருமளவுக்கு நலத்திட்ட உதவிகள், கோலாகல கொண்டாட்டங்கள் என அசத்திவிட்டார்கள் ரசிகர்கள்.

கந்தசாமி முதலித் தெருவில் நடந்த இந்த விழாவுக்கு சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் எம் பழனிவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மன்றத்தைத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு அகில உலக சூப்பர் ஸ்டார் ரசிகர் மன்ற செயலாளர் வி சீனிவாசன் தலைமை தாங்கினார். பொருளாளர் வரதன் முன்னிலை வகிக்க, வி சுந்தரம் வரவேற்றார்.

பின்னர் ஏழைகளுக்கு இலவச வேட்டி - சேலைகள் வழங்கப்பட்டன. மாணவ - மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களையும் மன்றத்தினர் வழங்கினர்.

மாவட்ட துணைத் தலைவர் மோகன் வேட்டி சேலைகளை வழங்கினார்.

மன்றத்தின் சார்பில் ஊனமுற்றவர்களுக்கு உதவித் தொகையை சேலம் மாநகராட்சி கவுன்சிலர் வி தர்மலிங்கம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட மன்ற துணைத் தலைவர் செல்வம், துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் உதவிப் பொருள்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

அம்மாபேட்டை பகுதி திமுக துணைச் செயலாளர் அருள், நங்கவல்லி ஒன்றிய செயலாளர் ஜி வெங்கடேஷ், மண்டல பொறுப்பாளர்கள் கேவி துளசிராமன், ஏ அருள்மணி, டி ரமேஷ், ஆத்தூர் தலைமை மன்றத்தைச் சேர்ந்த சுரேஷ், மன்ற நிர்வாகிகள் ஜெய்சங்கர், பூபதி, சித்தேஸ்வரன், தளபதிராம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

dsc_0451


dsc_0431


dsc_0467

நன்றி :
-அருள் கண்ணன், சேலம்
&
என்வழி.காம்

Monday, September 7, 2009

நல்ல பண்புகளை ரஜினியிடம் தான் கத்துக்கனும்...

‘நல்ல பண்புகளை ரஜினியிடம்தான் கத்துக்கனும்…!’

dsc_0654


ரஜினியை ஒரு முறை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தாலே போதும், காலத்துக்கும் அவரது ரசிகர்களாய் மாறிவிடுவார்கள்.

இத்தகைய அனுபவம் கொண்ட நிறைய பேரை நம்மால் காட்ட முடியும். எனக்குத் தெரிந்து தினமும் எத்தனையோ பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது.

ஷூட்டிங் ஸ்பாட்களில், ராகவேந்திரா மண்டபத்தில், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அல்லது அவர் வீட்டு வாசலில் அவர் வெளியில் வரும் நேரத்துக்காக காத்திருக்கும் தருணங்களில் (இப்போது இதைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்)… இப்படி சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்து அவரைச் சந்தித்து வாழ்க்கையின் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெறுகிறார்கள் நிறைய நண்பர்கள்.

தன்னைத் தேடிவரும் எல்லாரையும் முடிந்தவரை சந்திக்கத் தவறுவதில்லை தலைவர்.

எமது நண்பரும், மருத்துவருமான டாக்டர். தனசேகரன் ஒரு விழாவில் நமது சூப்பர் ஸ்டாரை சந்தித்த அனுபவத்தை காலத்துக்கும் மறக்கமுடியாத ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.

முன்னதாக, டாக்டர் தனசேகரன் பற்றிய சிறு குறிப்பு: ஒரு பிரபல தனியார் மருத்துவமணையில் பணியாற்றி பின் விருப்ப ஓய்வு பெற்று தற்போது தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். பிண்ணனி பாடகர்களில் தனக்கென்று ஒரு தனியிடம் பெற்றுள்ள பிரபல பாடகர் டாக்டர். கே.ஜே.ஏசுதாஸ் அவர்களின் சிஷ்யர்களில் ஒருவர் தனசேகரன். மேலும் ரஜினியைச் சந்திக்கும் வரை அவர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர் இல்லை என்பதும் குறிப்பிடதக்கது.

ரஜினியைச் சந்தித்த பிறகு அவரைப் பற்றி தான் கொண்ட மதிப்பீடுகளே மாறிப் போனதாகக் குறிப்பிடுகிறார் டாக்டர் தனசேகரன்.

இனி தனசேகரன் உங்களுடன்…

ஒருநாள் நான் ஏசுதாஸ் அண்ணாவை பார்க்க சென்று இருந்தேன். அப்போழுது அவர் எங்கோ அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். என்னை பார்த்தவுடன், வா! சேகரா! என்று என்னையும் அழைத்துக்கொண்டு காரில் ஏறி புறப்பட்டார். நானும் எங்கே என்று கேட்கவில்லை. சென்ற பிறகுதான் தெரிந்தது அது ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்படத்தின் வெற்றி விழா பார்ட்டி என்று.

அனைவரும் பார்டியில் ஐக்கியமானோம். திரைப்படத்தில் நடித்து இருந்த அனைவரும் திரண்டு இருந்தனர். அற்புதமான பார்ட்டி அது. ரஜினி காந்த், பிரபு, ராம்குமார், அண்ணா (கே.ஜெ.ஏசுதாஸ்) எல்லாம் ஒரே ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர்.

இடையே அண்ணா என்னை அழைத்து ரஜினி சாரிடம் என்னை இவர் டாக்டர் சேகர், என் சிஷ்யர்களில் ஒருவர் என்று அறிமுகப்படுத்தினார். அடுத்த கணம், அமர்ந்து இருந்த ரஜினி சார் எழுந்து நின்று ‘வாங்க! வாங்க!’ என்று கை குலுக்கி வரவேற்றார். எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

‘சார்.. நீங்க மன்னன் படத்திலே நல்ல நடிச்சிருக்கீங்க, படம் சூப்பர்!’ என்றேன்.

உடனே அவர் அடக்கத்துடன், ‘எல்லாம் உங்க ‘அண்ணா’தான் காரணம்’ என்றார்.

‘எனக்கு புரியவில்லை’ என்றேன்.

அதற்கு அவர் அண்ணா அவர்கள் பாடிய, ‘அம்மா என்று அழைக்காத..’ பாடலால்தான் இவ்வளவு பெரிய ஹிட்!’ என்றார்.

எனக்கு ஒரே ஷாக்..

‘ஒரு கதாநாயகனிடம் சென்று உங்க படம் சூப்பர் என்றால் அதற்கு அவர்கள் தற்பெருமையுடன் நான் அப்படி நடித்தேன் இப்படி ரிஸ்க் எடுத்தேன் என்று சொல்ல பார்த்தும், கேட்டும் இருக்கிறேன். ஆனால் இவரோ தன் திரைப்படத்தில் ஒளித்த ஒரு பாடலால்தான் இந்த வெற்றி என்கிறாரே…’ என்று வியந்தேன்.

பிறகு அவர் என்னிடம், ‘சாப்ட்டீங்களா, முதல்ல சாப்பிடுங்க, பிறகு பேசுவோம்’ என்றார். நானும் சாப்பிட்டு விட்டு எப்படி மறுபடியும் அவரிடம் சென்று பேசுவது என்று தயங்கி நின்றிருந்தேன்.

சிறிது நேரம் கழித்து அவரே என்னை அழைத்தார். என்னை பற்றியும், என் குடும்ப நலனையும் கேட்டறிந்தார். தொழிலைப் பற்றிக் கேட்டர். பிறகு பொதுவாக கொஞ்சம் நேரம் பேசிவிட்டு அண்ணாவும் நானும் புறப்பட, வாசல் வரை வந்து வழியனுப்பிய விதம் மனதை கவர்ந்தது. ஏசுதாஸ் அண்ணா அவர்களுடன் சென்று அனேக பெரிய திரை நட்சத்திரங்களை எல்லாம் சந்தித்து இருக்கேன். உலக மகா நடிகர்களும் தன்னைத் தேடி வரும் ஒரு விருந்தினரை ஒரு நட்பு நிமித்தமாக கூட வரவேற்க மாட்டார்கள். அப்படி வரவேற்றாலும் அவர்களின் செயற்கைத்தனம் நன்றாகத் தெரியும்.

ஆனால் ரஜினி சாரோ, ஒரு விருந்தினரை அன்புடன் வரவேற்று, ஒரு சகோதரன் போல பரிவு காட்டும் பண்பைக் கண்டு வியந்தேன். புகழின் போதை சிறிதும் அவரிடம் காண முடியவில்லை. நான் சந்தித்தவர்களில் நம்பியார் குருசாமி, ரஜினி சார் இவர்கள்தான் இத்தகைய பண்பை பெற்று இருந்தார்கள் என்றார் டாக்டர் தனசேகரன்.

சும்மாவா பாடினார் சூப்பர் ஸ்டார்,அன்பின் உறவாயிரு! உண்மை மறவாதிரு! 100 காலம் வரை வாழ்வின் வளமாயிரு!”