Monday, September 21, 2009

மலடா..... அண்ணாமல......

20.09.2009
இந்த
நாள்...... சத்யம் திரையரங்கம் அதிர்ந்த நாள்...
காரணம் அண்ணாமலை திரைப்படம்

நண்பர்களுடன் தலைவர் படங்களை பற்றி பேசும் பொழுதெல்லாம் திரைஅரங்கிலே சென்று பார்க்க முடியாமல் போன படங்களை பற்றி ஏக்கத்துடன் பேசுவது உண்டு. அப்படி பேசும்பொழுதெல்லாம் தவறாமல் இடம் பெறும் படம் அண்ணாமலை. ஆனால் அக்குறை நேற்றோடு தீர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

அப்படி ஒரு அனுபவம் நேற்று நேர்ந்தது.

குழம்பிய பொதுமக்கள் :
காலை சுமார் 8:20 மணி அளவில் சத்யம் வளாகம் நமது ரசிகர் நண்பர்களால் கலை கட்டி இருந்தது இரண்டு 1000 வாலா சரவெடியுடன் கொண்டாட்டம் துவங்கியது. சத்யம் திரையரங்கை கடந்து செல்வோர், இன்று ஏதாச்சும்.... சூப்பர் ஸ்டாரின் புதுப்படம் ரீலிசோ என்று குழம்ப செய்தது அந்த கொண்டாட்டம்...

உற்சாகத்துடன் உள்ளே சென்று அமர்ந்து ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தோம்.....



சொதப்பிய
சத்யம் :
கவிதாலயா என்று டைட்டில் கார்ட் போட்டவுடன் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தார்கள் ஆனால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டை போடாமல் சொதப்பியது சத்யம்....ரசிகர்கள் அனைவரும் டைட்டில் கார்டை போடச்சொல்லி குரல் எழுப்பியும் எந்த பலனும் இல்லை.....வீனாய் போனவர்கள்..... இருங்கப்பு.... எந்திரன், சுல்தான்ன்னு வரிசையா இருக்கு.......

வந்தேண்டா பால்காரன்....
படம் துவங்கியதும் சிறு வயது அண்ணமலை அறிமுக காட்சியில் ரசிகர்களின் விசில் பறந்தது.....சிறு வயது அண்ணாமலைக்கே இப்படினா தலைவர் அறிமுகம் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்.

வந்தேண்டா பால் காரன் பாடல் ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கத்த துவங்கினார்கள்.....தலைவர் முகத்தை பார்த்தவுடன் பேப்பர் தூவி நடனம் ஆடினார்கள். இன்னும் சிலர் தங்கள் சட்டையை கழட்டி சுற்றினார்கள்..... 'என்னை வாழ வைத்தது தமிழ் பாலு' என்று தலைவர் பாடும் பொழுது விசில் சத்தமும் ரசிகர்கள் எழுப்பிய சத்தமும் அடங்க வெகு நேரம் ஆனது....

அதிர்ந்த சத்யம் திரையரங்கம் :
இதற்கு பிறகு ஒவ்வொறு காட்சி ஒவ்வொறு வசனத்திற்கும் கை தட்டல் தான்.... எத்தனை முறை ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தார்கள் என்ற கணக்கே கிடையாது. திரை அரங்க ஊழியர்கள் எத்தனை முறை வந்து சொல்லியும் நம் ரசிகர்களை அடக்க முடியவில்லை

தலைவர் படம்னா தியேட்டர் அதிரும் அத யாராலயும் தடுத்து நிறுத்த முடியாது. சரத் பாபு நிலத்தை கேட்டவுடன் தலைவர் எடுத்துக்கோ என்று சொல்வார் அதற்கு சரத் பாபு இந்த இடத்ததான் நீ யாருக்குமே தர மாட்டியே என்று சொல்ல தலைவர் இப்ப மட்டும் என்ன இந்த இடத்த யாராவது கேட்டா இல்ல ச்சும்மா பார்த்தாலே போதும் தொலச்சிடுவன் ஆனா நீ யாருடா என் அஷொக் டா என்று சொல்லும் போது நம்மை அறியாமல் நம் கண்கள் கலங்கின....

தலைவர் தலைவர் தாண்டா
முதல் பாதி வரை விசில் ஆரவாரம் ஒன்ஸ்மோர் இவற்றோடு ரகளையாய் முடிந்தது.... இடைவேளையின் பொழுது அனைவர் முகத்திலும் அவ்வளவு சந்தோஷம். சில பெண் ரசிகர்களையும் பார்க்க முடிந்தது.

TCSல் பணிபுரியும் ஒரு பெண் ரசிகர் 'தலைவர் படம்னா சும்மாவா.... தொடர்ந்து நாலு ஷோ போட்டாகூட பார்க்கலாம்' என்று சொல்லி நம்மை ஆச்சர்யபடுத்தினார்.

அனல் பறக்க வைத்த தலைவரின் வசனங்கள் :
இரண்டாம் பகுதி படம் பற்றி சொல்லவே தேவை இல்ல
ஒவ்வொரு வசனத்திற்கும் கை தட்டல்கள் விசில் ஒண்ஸ் மோர் தான்...

உதாரணத்திற்கு சில
சவால் விடும் காட்சி....இந்த காட்சியில் தலைவரின் கோபம் ஆவேசம் ஆக்ரோஷம் ஆகியவை சிலிர்க்க வைத்தன....

"வக்கீல் சார் ஆண்டவன் கோர்ட்டுனு ஒண்ணு இருக்கு அங்க இந்த அண்ணாமல நிச்சயம் ஜெயிப்பான் சார்"

"வெற்றி நிச்சயம் பாடல்...." என்ன ஒரு வரிகள்.
தலைவருக்கு மட்டுமே பொருந்தும் வரிகள்.

தலைவர் சேர்மேனாக பதவி ஏற்கும் காட்சி,
'என்னா style தலைவா....'

ஏலம் எடுக்கும் காட்சி அதை தொடர்ந்து வரும் கணக்கு dialogue
தலைவர் மேலே செல்ல சரத்பாபு கீழே இரங்க இறுதியில் மல டா அண்ணமல என்று சொல்லும் போது அரங்கமே அதிர்ந்தது

கிளைமேக்ஸ் :
இப்படி கிளைமேக்ஸ் வரை தலைவர் போன் எடுத்தாலும் அதிருது... கையால் நெருப்பை அனைத்தாலும் அதிருது... மொத்தத்தில் படு ரகளையாக படம் முடிந்தது.

படம் முடிந்து இருக்கையில் இருந்து எழுந்து வரும் போது அனைவரும் ஒட்டு மொத்த குரலில் "தலைவர் வாழ்க! வருங்கால முதல்வர் வாழ்க!!" என்று கோஷம் எழுப்பினார்கள்

கும்தலக்கடி.... கும்மாவா....
திடீரென்று உற்சாக மிகுதியில் 'தலைவா!' 'தலைவா!!' என்று நடனம் ஆட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்த திரையரங்க ஊழியர்கள் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் முடியவில்லை.

"கு ம் த ல க் க டி கு ம் மா வா ... த லை வ ரு ன் னா சு ம் மா வா...." என்று ஆடியபடியே இரண்டாம் தளத்திலிருந்து கீழ் தளம் வரை வந்தார்கள் கீழே வந்த பிறகும் ஆட்டம் குறையவில்லை.

வியந்த திரையரங்க ஊழியர்களும், பொதுமக்களும் :
ரசிகர்களின் கொண்டாட்டத்தை கண்ட சத்யம் ஊழியர்கள்..... 'சூப்பர் ஸ்டார் படம்முன்னதம்பா இந்த கலை கட்டுது' என்று பேசியது நம் செவிகளுக்கு மேலும் ஒரு உற்சாகம் தந்தது.

நம் ரசிகர்களின் உற்சாக ஆட்டத்தை மற்ற படத்தினை காண வந்த அனைவரும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

மீண்டும் சந்திப்போம்
பின்னர் ரசிகர்கள் அனைவரும் மகிழ்சியுடனும் உற்சாகத்துடனும் பிரிந்து சென்றனர்.
மொத்தத்தில் சத்யம் வளாகமே விழா கோலம் பூண்டது என்றால் மிகையாகது.

"இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் தலைவர், தலைவர் தான்
எவனாலும் அவரை அசைக்க முடியாது"

"ஏன்னா...... தலைவர் மலடா....."
-மித்ரா

2 comments:

  1. சூப்பர் சூப்பர் சூப்பர்...

    Carry on ரஜினி ராஜேஷ் - மித்ரா ;-)

    ReplyDelete
  2. அருமையான தொகுப்பு திரு மித்திர அவர்காளே.ஒரு அருமையான விருந்தை மிஸ் பண்ணிவிட்டோம்.சரி ஒட்டுமொத்தமாக எந்திரனக்கு வைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

    ReplyDelete