Thursday, July 23, 2009

ரஜினி - The Entertainer

தலைவர் ரஜினி அவர்களை இன்று பலர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்
அவர் என்ன பெருசா நடிச்சுட்டார், வெறும் style தான். அவர் படங்களில் கதை என்று ஒன்றும் கிடையாது போன்று பல்வேறு விமர்சனங்களை நாம் பார்க்கின்றோம்.

இது போன்ற விமர்சனம் செய்பவர்கள் ஒரு விஷயத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,திரைப்படம் என்பது ஒரு entertainment medium. இங்கே ஒரு படம் மக்களை எந்த அளவுக்கு திருப்திபடுத்துகிறது, எந்த அளவுக்கு சந்தோஷப்படுத்துகிறது, எந்த அளவுக்கு தங்கள் கவலையை மறக்க செய்கிறது, எந்த அளவுக்கு பணம் போட்ட தயாரிப்பாளருக்கு பணத்தை ஈட்டி தறுகிறது என்பதே முக்கியம்.

இதன் அடிப்படையில் நம் தலைவர் அவர்கள் தான் சார்ந்து இருக்கின்ற entertainment mediumல் நிச்சயம் என்றுமே மன்னன் தான். ஒப்பனைகளை நம்பாமல் தன் இயல்பான தோற்றத்திலேயே நடித்து தான் ஏற்றுள்ள கதாபாத்திரமாக வாழ்வதென்பது ஒரு நடிகனுக்கு எளிதான காரியமல்ல
அதில் நம் தலைவர் வல்லவர் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆனால் இங்கு சமீபமாக ஒரு சிலர் ஒரு நடிகன் என்பவன் 'உடலை வருத்திக்கொள்ள வேண்டும் get upஐ மாற்றிக்கொள்ள வேண்டும் குரலை மாற்றிப்பேச வேண்டும்' என்பவை எல்லாம் தான் ஒரு நடிகனுக்கான இலக்கணம் என்ற தவறான கருத்து உலவி வருகிறது.

அப்படி என்றால் Hollywoodல் MORGAN FREEMAN என்று ஒரு நடிகர் இருக்கிறார் அவர் பல படங்களில் ஒரே மாதிரியான தோற்றத்தில் தான் இருப்பார். ஆனால் அவரின் நடிப்பு திறமையின் மூலம் தான் ஏற்ற கதாபத்திரமாகவே வாழ்ந்து இருப்பார்.

Bollywoodல் நானா படேகர் தன் நடிப்பாற்றலின் மூலம் கெட் அப் எதுவும் மாற்றமலேயே திருடன் பாத்திரத்தில் திருடனாகவும் போலீஸ் பாத்திரத்தில் போலீஸ்-ஆகவும் தெரிவார். மனோஜ் பாஜ்பாய் என்ற நடிகர் கெட் அப் சேஞ் செய்யாமலே சத்யா என்ற படத்தில் நடித்து தேசிய விருது வாங்கினார். இவர்களை எல்லாம் இந்த விமர்சன கும்பல் என்ன சொல்ல போகிறது.

இன்று ஏதோ இணையதளத்தில் உலக படங்கள் சிலவற்றை பார்த்துவிட்டு நல்ல திரைப்படம் கெட்ட திரைப்படம் என்று ஆள் ஆளுக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் விமர்சனத்தின் நோக்கம் நம் தலைவரை மட்டம் தட்டுவதேயன்றி வேறு எதுவும் இல்லை. என் நண்பர்கள் சிலர் திரு. கமல் அவர்களின் அவர்களின் தீவிர ரசிகர்கள். எல்லாரையும் போல தலைவரின் படங்களை விமர்சிப்பார்கள் ஆனால் அதில் ஏகன் பார்த்து ஆட்டம் போடுபவரும் உண்டு வில்லு பார்த்து விட்டு ஆட்டம் போடுபவரும் உண்டு. இப்போது மட்டும் அவர்களின் திரைப்பட ரசனை எங்கு போனது என்று தெரியவில்லை. காரணம் ஒன்று தான் அஜித் மற்றும் விஜய் இருவரும் கமல் என்பவருக்கு போட்டியல்ல அதனால் அவர்களின் ஆட்டம் பாட்டம் heroism மற்றும் hero துதி பாடும் பாடல் ஆகியவற்றை கமல் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இதுவே நம் தலைவர் படம் என்றால் அதை அவர்களால் குறை கூற மட்டும் தான் முடியும் ஏன் என்றால் நம் தலைவர், அவர்களின் ஆஸ்த்தான நாயகனின் போட்டியாளர் அல்லவா. இவர்கள் தான் மகாநதி,குணாவை விட பஞ்சதந்திரம், தசாவதாரத்தை வெற்றி பெற செய்தவர்கள்(தசாவதாரம் படத்தின் உலக நாயகனே பாடலை விட hero துதி பாடும் பாடல் வேறு எதுவும் இருக்க முடியாது) இதுவே மனித இயல்பு.

சச்சினை பிடிக்காத பலர் அவரை எப்படியாவது விமர்சிக்கவேண்டும் என்பதற்காக எதுவுமே கிடைக்காமல் அவர் 90களில் ஆட்டம் இழப்பதை கிண்டல் செய்வார்கள். அப்படி பட்டவர்களிடம் சச்சினின் சாதனைகளையும் உல்கம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளாக பார்க்க்ப்படுகிறார் என்றும் சொன்னால் அதை ஏற்க மாட்டார்கள்.

அது போல் தான் சிலரால் நம் தலைவர் பற்றிய விஷயங்களை ஏற்க முடியாது.மேலும் நம்மை எல்லாம் முட்டாள் என்பது போல் பேசுவார்கள். அதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நம் தலைவரின் நடிப்பாற்றலை ரசித்து உணர்ந்து வியந்து பாராட்டிய சேகர்கபூர், ராம்கோபால் வர்மா, அமீர்கான் போன்றவர்களும் இவர்களை பொருத்தவரை முட்டாள்களே. விமர்சனம் செய்பவர்கள் புத்திசாலிகளாகவே இருந்து விட்டு போகட்டும். ரசிக்கும் படி படத்தை தராமல் ரசிகர்களை குறை சொல்லும் வழக்கம் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவும் அவர்கள் புத்திசாலிதனத்தில் ஒன்று.

பேசட்டும் பேசட்டும் எல்லாம் எந்திரன் வரை தான். அப்போது எழும் கைதட்டல் சத்தத்தில் எட்டு திக்கும் அதிர போகிறது. பாவம் அப்போது அவர்கள் எவ்வளவு உரக்க கத்தினாலும் (உளையிட்டாலும்) கேட்காது.

தலைவர் தனது திரைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்பதை அவர் வாயிலாக :

- மித்ரா

Friday, July 17, 2009

கோடானு கோடி நன்றிகள்


நண்பர்களுக்கு வணக்கம்.

ஒரு முக்கிய பணி நிமித்தமாக வெளியூர் சென்று இருந்ததால் உங்களுடைய பின்னுட்டதிருக்கு நன்றி தெரிவிக்க இயலமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.

வாழ்த்தி வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த கோடானு கோடி நன்றிகள்.

Monday, July 13, 2009

சூப்பர் ஸ்டாரை லைட்மேன் முதல் தயாரிப்பாளர் வரை பெருமையாக கருதுவது ஏன்?


சூப்பர் ஸ்டாரை லைட்மேன் முதல் தயாரிப்பாளர் வரை பெருமையாக கருதுவது ஏன்?

திரையுலகில் சூப்பர் ஸ்டாரை லைட்மேன் முதல் தயாரிப்பாளர்கள் வரை பெருமையாக கருதுவது ஏன் தெரியுமா... தன்னை எந்த நிலையிலும் அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக நினைத்து நடந்து கொள்ளாததே.

தலைவர் மக்களுடன், ரசிகர்களுடன் பழகும் விதம், அவரின் எளிமை, அவரின் ஆன்மீக சிந்தனை மற்றும் தொலைநோக்கும் திறன் உலகம் அறிந்தது.

தனது தொழிலை நேசிப்பதும் கடவுளை வணங்குவதும் ஒன்றே என்ற உயர்ந்த தத்துவத்தை திரையுலகில் தனது முன்னோடிகளிடமிருந்து கற்றுக் கொண்ட தலைவர், இன்று அதை தனக்கு அடுத்த நிலையில் உள்ள பலருக்கும் கற்றுக் கொடுத்து வருகிறார். சிலர் அவருடன் பழகி கற்றுக் கொண்டிருக்கிறார்கள்... இன்னும் சிலரோ அவரைப் பார்த்தே கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பல்வேறு சூழலில் பல்வேறு தரப்பினர் நமது சூப்பர் ஸ்டாரை பற்றி பெருமையுடன் நினைவு கூர்ந்ததை இங்கே ஒரு தொகுப்பாகத் தந்துள்ளோம். ரசிக நண்பர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியும் என்றாலும், மீண்டும் ஒரு நினைவு கூறலாக இதைப் படிக்கவும்.

சூப்பர் ஸ்டார் தான் நட்பு பாராட்டும் நண்பர்களையும், திரையுலகில் தான் மதிக்கும் சீனியர் நடிகர்களையும் தன்னுடைய எல்லா திரைப்படங்களிலும் நடிக்க வைப்பார். அமரர்கள் அசோகன், தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, ஜெய்சங்கர், இப்போதுள்ளவர்களில் விஜயகுமார் மற்றும் நடிகை மனோரமா என்று இந்த பட்டியல் பெரியது.

இவர்கள் அனைவருமே ரஜினியை தங்களின் பாசத்துக்குரிய குடும்ப உறுப்பினராகவே கருதியவர்கள் (மனோரமா ஒருவரைத் தவிர). குறிப்பாக தேங்காய் சீனிவாசன் ரஜினி குறித்து மிக உயர்வாகப் பேசுவார். எண்பதுகளிலேயே, புரட்சித் தலைவருக்கு அடுத்த ஒரு சிறந்த மனிதன் ரஜினிதான் என்று வெளிப்படையாகச் சொன்னவர் தேங்காய் சீனிவாசன்.

பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான கே. பாலாஜி அவர்கள், அமரராவதற்கு சில தினங்கள் முன்பு ஜெயா தொலைக்காட்சியில் ரஜினியைப் பற்றி இவ்வாறு கூறினார்:

முன்பெல்லாம் தயாரிப்பாளர்களை கண்டால், நடிகர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். இன்றோ, நடிகர்களை பார்த்து தயாரிப்பாளர்கள் எழுந்து மரியாதை செய்கிறார்கள். ஆனால், திரு. ரஜினி அவர்கள் அன்று முதல் இன்று வரை அவர் திரையுலகில் பர்பெக்ட் ஜென்டில்மேனாக நடந்து கொள்கிறார். தனது முன்னோடிகள், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் அவர் காட்டும் மரியாதையும் மதிப்பும் கொஞ்சமும் மாறவில்லை. அதனால் தான் அவர் அந்த உயரத்தில் உள்ளார், என்றார்.

நமது இயக்குனர், ரஜினி ரசிகர்கள் சமூகத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் என்ற பெருமைக்குரியஎஸ்.பி.முத்துராமன் இதே ஜெயா தொலைக்காட்சியில் தன் திரையுலக நினைவுகளைப் பகிரந்து கொண்டார்.

அப்போது அவர் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி, ரஜினியின் எளிமைக்கும் சினிசியாரிட்டிக்கும் உதாரணம்:

நான் இயக்கிய சுமார் 75 படங்களில், 25 திரைப்படங்கள் சூப்பர் ஸ்டார் நடித்ததே. அதில் ஒரு சில திரைப்படங்கள் ஹிட். மற்ற அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதில் ஒன்று 'குரு சிஷ்யன்'.

அந்த திரைப்பட படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்... படத்துக்கு ரஜினி சார் ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்து இருந்தார்.

அந்த சமயத்தில் நடிகை சீதா பிஸியாக இருந்ததால், அவரும் பிரபு அவர்களும் இணைந்து நடிக்க வேண்டிய பாடல் காட்சி ஒன்று இருந்தது. அந்த பாடல் காட்சியை படமாக்கினால், ரஜினி சாருக்கு அன்று படப்பிடிப்பு இல்லை. எனவே, சூப்பர் ஸ்டாரிடம் சென்று நிலைமை எடுத்து கூறி நீங்கள் ஒருநாள் வேண்டுமானால், சென்னைக்கு சென்று வாருங்கள் என்று கூறினோம்.

நான் உங்களுக்கு ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளேன். அது முடிவடையாமால், இங்கே இருந்து போகமாட்டேன், நீங்கள் தாரளாமாக அந்த பாடல் காட்சியை பதிவு செய்யுங்கள் என்றார்.

"சரி, நீங்க ஒரு நாள் ஓட்டலிலாவது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். நான் அந்த பாடல் காட்சியை படமாக்கிவிடுகிறேன்", என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு தயார் நிலையில் இருந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் படபிடிப்பு தளத்திற்குள் வந்து விட்டார்.

ஏன்? என்று கேட்டேன்.

"இன்று முழுவதும் நான் உங்கள் உதவியாளர். நீங்கள் படப்பிடிப்பை ஆரம்பியுங்கள்", என்று சொல்லிவிட்டார். சொன்னதுடன் நில்லாமல் அன்று நாள் முழுதும் லைட்மேனாக, உதவியாளராக, ட்ராலியை தள்ளிக்கொண்டு ஒரே ஜாலியாக எங்களுடன் அவர் இருந்தது மறக்க முடியாதது," என்றார்.

இது நடிகர் நிழல்கள் ரவி சொன்ன ஒரு சம்பவம்:

ஒரு நிகழ்ச்சியில் நிழல்கள் ரவியிடம் ஒரு மூன்று புகைப்படங்களைக் கொடுத்து, அந்தப் படங்களில் உள்ளவர்களுடன் ரவிக்கு ஏற்ப்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து பேசச் சொன்னார்கள்.

மூன்றில் ஒன்று சூப்பர் ஸ்டார் புகைப்படம். அதை பார்த்த மாத்திரத்தில், "Wow, he is my best friend, well wisher too!" என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "நான் திரையுலகில் முன்னேறிக்கொண்டு இருந்த சமயத்தில் அடிக்கடி தாஜ், சோழா போன்ற ஓட்டல்களுக்கு அடிக்கடி செல்வேன்.

அப்போது ஒரு முறை ரஜினி சார் என்னைப் பார்த்துவிட்டார். உடனே அழைத்து, 'என்ன ரவி எப்படி இருக்கீங்க, எப்படி தொழில் நடக்குது, இப்படியே போய்ட்டு இருந்தா எப்படி?' என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

உடனே, 'என்ன.. வீடு, வாகனம் எல்லாம் வாங்கிட்டீங்களா?' என்றார்.

நான் 'இன்னும் இல்லை' என்றேன். உடனே அவர், 'முதலில் வீடு, வாகனங்கள் வாங்கிடணும். அப்புறமா இப்படி வாழ்க்கையை ஆனந்தமாக கழிக்கலாம்...' என்றார்.

அதற்கு பிறகுதான் நான் வீடு, வாகனம் எல்லாம் வாங்கி லைப்ல செட்டிலானேன்," என்றார்.

உடனிருப்பவர்களும் சேர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விரும்புபவர் சூப்பர் ஸ்டார். தன்னால் முடிந்தவரை அதற்கு உதவியும் செய்பவர்.

தலைவரின் இந்த குணம் அறிந்துதான் அமரர் வி.கே.ஆர் அவர்கள், சூப்பர் ஸ்டாரின் புகைப்படத்தை தன் பூஜை அறையில் வைத்து போற்றினார்.

மேடை நாகரிகமின்றி இன்னா செய்த மனோரமாவுக்கும் நன்மை செய்து நாண வைத்த பெருந்தகை சூப்பர் ஸ்டார்.

மேலும், வெற்றி தோல்வி இரண்டையும் ஒன்றாக பார்க்கும் அகண்ட பார்வை கொண்டவர் நமது சூப்பர் ஸ்டார். அதனால்தான் தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக பாபா திரைப்படத்தால் நஷ்டம் என்ற பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக, அதை ஈடுசெய்ய பணத்தை லாபத்துடன் திருப்பித் தந்தவர். இன்றைய தேதிக்கு பாபாவால் எல்லோரும் லாபம்தான் பெற்றார்களே தவிர, நயா பைசா நஷ்டம் அடையவில்லை.

ரசிகர்களையும் தாண்டி ரஜினியை ஏன் அனைவருக்கும பிடிக்கிறது தெரியுமா... அவர் அரைவேக்காடுகளின் விமர்சனங்களைக் கண்டுக்கொள்வதுமில்லை, சுயநலமிகள் சிலரது புகழ்மொழிக்கு மயங்குவதும் கிடையாது.

விருது, பாராட்டு விழா போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவர். 'பணம், புகழ் இதெல்லாம் வந்தாலும் சரி, போனாலும் சரி ஏன்னு கேட்க முடியாது' என தனது அனுபவத்தையே பாடமாக சொன்னவர் அல்லவா..!

அதனால்தான் இன்றும் நிறைகுடமாய், எல்லாம் அறிந்தும் எதுவும் தெரியாத பாவனை காட்டும் ஞானியாய், ரசிகர்கள், இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டியாய் திகழ்கிறார் தலைவர்.

நன்றி
ரஜினி ராஜேஷ்.