Thursday, July 23, 2009

ரஜினி - The Entertainer

தலைவர் ரஜினி அவர்களை இன்று பலர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்
அவர் என்ன பெருசா நடிச்சுட்டார், வெறும் style தான். அவர் படங்களில் கதை என்று ஒன்றும் கிடையாது போன்று பல்வேறு விமர்சனங்களை நாம் பார்க்கின்றோம்.

இது போன்ற விமர்சனம் செய்பவர்கள் ஒரு விஷயத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,திரைப்படம் என்பது ஒரு entertainment medium. இங்கே ஒரு படம் மக்களை எந்த அளவுக்கு திருப்திபடுத்துகிறது, எந்த அளவுக்கு சந்தோஷப்படுத்துகிறது, எந்த அளவுக்கு தங்கள் கவலையை மறக்க செய்கிறது, எந்த அளவுக்கு பணம் போட்ட தயாரிப்பாளருக்கு பணத்தை ஈட்டி தறுகிறது என்பதே முக்கியம்.

இதன் அடிப்படையில் நம் தலைவர் அவர்கள் தான் சார்ந்து இருக்கின்ற entertainment mediumல் நிச்சயம் என்றுமே மன்னன் தான். ஒப்பனைகளை நம்பாமல் தன் இயல்பான தோற்றத்திலேயே நடித்து தான் ஏற்றுள்ள கதாபாத்திரமாக வாழ்வதென்பது ஒரு நடிகனுக்கு எளிதான காரியமல்ல
அதில் நம் தலைவர் வல்லவர் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆனால் இங்கு சமீபமாக ஒரு சிலர் ஒரு நடிகன் என்பவன் 'உடலை வருத்திக்கொள்ள வேண்டும் get upஐ மாற்றிக்கொள்ள வேண்டும் குரலை மாற்றிப்பேச வேண்டும்' என்பவை எல்லாம் தான் ஒரு நடிகனுக்கான இலக்கணம் என்ற தவறான கருத்து உலவி வருகிறது.

அப்படி என்றால் Hollywoodல் MORGAN FREEMAN என்று ஒரு நடிகர் இருக்கிறார் அவர் பல படங்களில் ஒரே மாதிரியான தோற்றத்தில் தான் இருப்பார். ஆனால் அவரின் நடிப்பு திறமையின் மூலம் தான் ஏற்ற கதாபத்திரமாகவே வாழ்ந்து இருப்பார்.

Bollywoodல் நானா படேகர் தன் நடிப்பாற்றலின் மூலம் கெட் அப் எதுவும் மாற்றமலேயே திருடன் பாத்திரத்தில் திருடனாகவும் போலீஸ் பாத்திரத்தில் போலீஸ்-ஆகவும் தெரிவார். மனோஜ் பாஜ்பாய் என்ற நடிகர் கெட் அப் சேஞ் செய்யாமலே சத்யா என்ற படத்தில் நடித்து தேசிய விருது வாங்கினார். இவர்களை எல்லாம் இந்த விமர்சன கும்பல் என்ன சொல்ல போகிறது.

இன்று ஏதோ இணையதளத்தில் உலக படங்கள் சிலவற்றை பார்த்துவிட்டு நல்ல திரைப்படம் கெட்ட திரைப்படம் என்று ஆள் ஆளுக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் விமர்சனத்தின் நோக்கம் நம் தலைவரை மட்டம் தட்டுவதேயன்றி வேறு எதுவும் இல்லை. என் நண்பர்கள் சிலர் திரு. கமல் அவர்களின் அவர்களின் தீவிர ரசிகர்கள். எல்லாரையும் போல தலைவரின் படங்களை விமர்சிப்பார்கள் ஆனால் அதில் ஏகன் பார்த்து ஆட்டம் போடுபவரும் உண்டு வில்லு பார்த்து விட்டு ஆட்டம் போடுபவரும் உண்டு. இப்போது மட்டும் அவர்களின் திரைப்பட ரசனை எங்கு போனது என்று தெரியவில்லை. காரணம் ஒன்று தான் அஜித் மற்றும் விஜய் இருவரும் கமல் என்பவருக்கு போட்டியல்ல அதனால் அவர்களின் ஆட்டம் பாட்டம் heroism மற்றும் hero துதி பாடும் பாடல் ஆகியவற்றை கமல் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இதுவே நம் தலைவர் படம் என்றால் அதை அவர்களால் குறை கூற மட்டும் தான் முடியும் ஏன் என்றால் நம் தலைவர், அவர்களின் ஆஸ்த்தான நாயகனின் போட்டியாளர் அல்லவா. இவர்கள் தான் மகாநதி,குணாவை விட பஞ்சதந்திரம், தசாவதாரத்தை வெற்றி பெற செய்தவர்கள்(தசாவதாரம் படத்தின் உலக நாயகனே பாடலை விட hero துதி பாடும் பாடல் வேறு எதுவும் இருக்க முடியாது) இதுவே மனித இயல்பு.

சச்சினை பிடிக்காத பலர் அவரை எப்படியாவது விமர்சிக்கவேண்டும் என்பதற்காக எதுவுமே கிடைக்காமல் அவர் 90களில் ஆட்டம் இழப்பதை கிண்டல் செய்வார்கள். அப்படி பட்டவர்களிடம் சச்சினின் சாதனைகளையும் உல்கம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளாக பார்க்க்ப்படுகிறார் என்றும் சொன்னால் அதை ஏற்க மாட்டார்கள்.

அது போல் தான் சிலரால் நம் தலைவர் பற்றிய விஷயங்களை ஏற்க முடியாது.மேலும் நம்மை எல்லாம் முட்டாள் என்பது போல் பேசுவார்கள். அதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நம் தலைவரின் நடிப்பாற்றலை ரசித்து உணர்ந்து வியந்து பாராட்டிய சேகர்கபூர், ராம்கோபால் வர்மா, அமீர்கான் போன்றவர்களும் இவர்களை பொருத்தவரை முட்டாள்களே. விமர்சனம் செய்பவர்கள் புத்திசாலிகளாகவே இருந்து விட்டு போகட்டும். ரசிக்கும் படி படத்தை தராமல் ரசிகர்களை குறை சொல்லும் வழக்கம் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவும் அவர்கள் புத்திசாலிதனத்தில் ஒன்று.

பேசட்டும் பேசட்டும் எல்லாம் எந்திரன் வரை தான். அப்போது எழும் கைதட்டல் சத்தத்தில் எட்டு திக்கும் அதிர போகிறது. பாவம் அப்போது அவர்கள் எவ்வளவு உரக்க கத்தினாலும் (உளையிட்டாலும்) கேட்காது.

தலைவர் தனது திரைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்பதை அவர் வாயிலாக :

- மித்ரா

3 comments:

  1. //விமர்சனம் செய்பவர்கள் புத்திசாலிகளாகவே இருந்து விட்டு போகட்டும்.//

    இதுவே என் கருத்து

    ReplyDelete
  2. fantastic review gopi.
    ஆனால் அதில் ஏகன் பார்த்து ஆட்டம் போடுபவரும் உண்டு வில்லு பார்த்து விட்டு ஆட்டம் போடுபவரும் உண்டு. இப்போது மட்டும் அவர்களின் திரைப்பட ரசனை எங்கு போனது என்று தெரியவில்லை. காரணம் ஒன்று தான் அஜித் மற்றும் விஜய் இருவரும் கமல் என்பவருக்கு போட்டியல்ல அதனால் அவர்களின் ஆட்டம் பாட்டம் heroism மற்றும் hero துதி பாடும் பாடல் ஆகியவற்றை கமல் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இதுவே நம் தலைவர் படம் என்றால் அதை அவர்களால் குறை கூற மட்டும் தான் முடியும் ஏன் என்றால் நம் தலைவர், அவர்களின் ஆஸ்த்தான நாயகனின் போட்டியாளர் அல்லவா. //
    மறுக்க முடியாத உண்மை.கமல் வெறும் உள்ளாடை மட்டும் போட்டுகிட்டு சும்மா உக்காந்து இருந்தாலும் எங்க தலைவர் என்னமா நடிக்கிறார் என்று கைதட்டும் அறிவாளிகளுக்கு மத்தியில் நாம் எல்லாம் முட்டாள்கள்தான் கோபி.விடுங்க கமல் சொல்ல வருவது புரியாமலே கைதட்டி அறிவாளிகள் என்று பேர் வாங்குவதை விட படிப்பு வாசனையே அறியாத பாமரர்களை கூட தன நடிப்பால் சந்தோசப்படுத்தி மொத்த திரையரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் வாங்கும் தலைவர் ரஜினி போன்ற ஒரு அருமையான கலைஞருக்காக நாம் முட்டாள்களிடம் முட்டாள் என்று பேர் வாங்கினால் பரவாயில்லை(ஏனென்றால் முட்டாள்கள்தான் எப்பொழுதும் தன்னை அறிவாளி என்றும் மற்றவர்களை முட்டாள்கள் என்றும் கூறுவார்).

    ReplyDelete