Saturday, September 12, 2009

அடுத்தவர் புகழில் குளிர்காய நினைக்கும் ராகுல் காந்தி என்ற அரைவேக்காடு!

அடுத்தவர் புகழில் குளிர்காய நினைக்கும் ராகுல் காந்தி என்ற அரைவேக்காடு!

சமீபத்தில் சென்னை வந்த ராகுல் காந்தி எம்பி, பத்திரிகையாளர்களின் ஒரு முக்கிய கேள்விக்கு அளித்த பதில் இது:

rahul

*நடிகர் ரஜினிகாந்தை காங்கிரசில் சேர்க்கும் எண்ணம் உள்ளதா?

நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். யாரும் இதில் சேரலாம். அப்படி காங்கிரசில் அவர் சேர்ந்தால் அதிக மகிழ்ச்சி. ரஜினிகாந்த் ஒரு குற்றவாளி அல்ல. அவரை சேர்வதை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்போம். அவர் வருவதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால் நாங்கள் குறிப்பிட்ட யாரையும் குறிவைத்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தவில்லை. குற்றப் பின்னணி இல்லாதவர்கள் சேர்வதற்கு கதவு திறந்து வைக்கப்பட்டு உள்ளது (தினத்தந்தி)

** நடிகர் ரஜினி கட்சியில் சேருவாரா?

ரஜினி, குற்றப் பின்னணி கொண்டவர் கிடையாது. அவர் முன்வந்தாலும் முழு மனதுடன் வரவேற்போம். (தினமலர்)

இந்த பதில் குறித்த நமது கருத்தைப் பதியும் முன், இந்த அரைவேக்காட்டு வாரிசு தமிழகத்துக்கு வருவதையொட்டி எழுப்பப்பட்ட பிம்பங்களைப் பாருங்கள்…

‘ராகுல் சென்னைக்கு வருகிறார்… ரஜினியைப் பார்க்கிறார்… அடுத்து ஆட்சியைப் பிடிக்கிறார்!’ - இது குமுதத்தின் டெஸ்க் ஒர்க்.

‘ராகுல் காந்தியைப் பார்க்க ரஜினி ஒப்புக் கொண்டார். இருவரும் இதோ சந்திக்கப் போகிறார்கள்… கருணாநிதி குடும்பத்திடமிருந்து பிடுங்கி சோனியா காந்தி குடும்பத்துக்கு தமிழ்நாட்டை பட்டா எழுதி தரப்போகிறார்கள் தமிழக வாக்காளர்கள்!’- இது இன்னும் சிலரது மோசமான கற்பனை.

இந்த அரைவேக்காடு, பத்திரிகையாளர்களிடம் ரஜினி பற்றிப் பேசும்போது பயன்படுத்தியுள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள். “ரஜினிகாந்த் ஒரு குற்றவாளி அல்ல. அவர் சேர்வதை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்போம். குற்றப் பின்னணி இல்லாதவர்கள் சேர்வதற்கு கதவு திறந்து வைக்கப்பட்டு உள்ளது…”

-தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் என்பது ஒரு அரசியல் அனாதை. சவாரி செய்ய திமுக - அதிமுக என ஏதாவது ஒரு தோள் இருப்பதால்தான் இந்த சவலை ஜந்து இன்னும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. இல்லையேல் அது செத்த இடத்தில் புல் முளைத்துப் புதர் மண்டியிருந்திருக்கும்.

இந்தக் செல்லாத கட்சியில் சேர ரஜினி என்ற மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு பிரமுகரை அழைக்கும் விதம் இதுதானா… !

இதற்கெல்லாம் உச்சம் ராகுல் காந்தியின் இந்த மோசமான பேச்சுக்கு இன்னும் சில வெந்தும் வேகாத மண்டையர்கள் கைதட்டி விசிலடிக்காத குறையாக மகிழ்ந்து கொண்டிருப்பது. விஜய் - விஜய்காந்துக்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை, இந்த அரைவேக்காடு ரஜினிக்குக் கொடுத்துவிட்டதாம். அதனால் இவர்களுக்கு சந்தோஷம். இனத்தைக் காமுறும் இனம் என்பது இதுதான் போலிருக்கிறது!

அட கண்றாவியே… எதற்கு சந்தோஷப்படுவது என்ற விவஸ்தையே கிடையாதா?

உங்கள் வீட்டுப் பெண்ணைப் பார்த்து ஒருவன்… “எனக்கு விபச்சாரிகளைப் பிடிக்காது. நீ விபச்சாரி இல்லை. எனவே என் வீட்டுக்கு வா” என்று அழைத்தால் என்ன செய்வீர்கள்? ஆஹா… என்ன பிரமாதமான அழைப்பு… இதுவல்லவா மரியாதை என புல்லரித்துப் போய்விடுவீர்களா?

ராகுல் காந்தி ரஜினியை அழைத்த விதத்துக்கும் மேலே நாம் குறிப்பிட்ட உதாரணத்துக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

ரஜினி என்ன இவரைத் தேடிப்போய் பார்த்தாரா…? அல்லது காங்கிரஸ் அரசியல் பற்றித்தான் ஏதாவது கருத்து கூறினாரா? வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று கூற, அவரென்ன அட்மிஷனுக்குக் காத்திருக்கிறாரா?

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், மக்கள் தலைவர் மூப்பனார், வாஜ்பாய், சந்திரபாபு நாயுடு என எத்தனையோ தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆன்மீகவாதிகள்… அட 12 ஆண்டுகளாகக் காத்திருக்கும் ரசிகர்கள் என எவ்வளவோ பேர் அவரை அரசியலுக்கு வரச் சொல்லியும் ரஜினி அமைதியாக தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டு அரசியலே தன்னைச் சுற்றி இயங்கும் அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட ஒருவரைப் பற்றிப் பேசும் முறையா இது!

ஆனால் இதே ரஜினியை, இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளர், முன்னாள் துணைப் பிரதமர் என்ற அந்தஸ்தில் இருந்த எல் கே அத்வானி வீடு தேடிப் போய் பார்த்தார் (பாஜக நமக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்…). அதுதான் பண்பாடு… மரியாதை!

இனப் படுகொலைக்கு துணைநிற்கும் ஒரு குடும்பத்து வாரிசிடம் அதை எதிர்ப்பார்ப்பது தவறுதான். நல்ல வேளை… எப்போதும் சரியான நேரத்தில் சரியான, நியாயமான முடிவை எடுக்கும் ரஜினி, இம்முறையும் இந்த காங்கிரஸ் ஓநாயைச் சந்திக்காமல் தவிர்த்து, தமிழர் உணர்வுக்கு மரியாதை தந்தார்.

ஆனால் ராகுல் என்ற இந்த தப்பான நபருக்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்கும் ‘சொந்த சோதரர்களின் சிந்தை காணும்’ நேரமெல்லாம் நெஞ்சு பொறுக்குதில்லையே… இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்!

குறிப்பு: விஜய் - விஜய்காந்தை நமக்குப் பிடிக்குமா இல்லையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். ஆனால் இந்த இருவரும் கூட கஷ்டப்பட்டு சேர்த்து வைத்ததுதான் இந்த புகழ் வெளிச்சம். சும்மா வந்துவிடவில்லை. அதை எத்தனை சுலபத்தில் களவாடப் பார்க்கிறார் இந்த அரைவேக்காடு ராகுல்!

இந்த இரு நடிகர்களும் நிஜமாகவே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்… ‘முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்ற பாரதியின் கோபத்தைக் காட்டியிருக்க வேண்டாமா… ஆனால் இவர்களோ காங்கிரஸ் எனும் வியாபாரிகளோடு பேரம் பேச துண்டோடு காத்திருக்கும் போது நாம் என்ன சொல்லி என்ன பண்ண… விதி வலிய…து!

நன்றி!
-விதுரன்
என்வழி.காம்

1 comment: